india

img

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்நியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிதீவிரமாக பரவி வந்த நிலையில், மாநிலங்களின் ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது. நேற்று தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 45,951 ஆக பதிவாகியுள்ளது.  

இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48 ஆயிரத்து 786 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 5,23,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 61,588 சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,94,88,918 ஆக உயர்ந்துள்ளது.  நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  3,04,11,634 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 1,005 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,99,459 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 33 கோடியே 57 லட்சத்து 16 ஆயிரத்து 19 ஆக உள்ளது எனவும் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;