india

img

கூற வேண்டியதை கூறத்தான் செய்வேன்.... கவிஞர் முருகன் காட்டாக்கடா....

திருவனந்தபுரம்:
இந்த அச்சுறுத்தல் தனக்கு உண் மையாகவும் சத்தமாகவும் பேசும் ஆற்றலைத் தருகிறது, நான் கூற வேண்டியதை கூறத்தான் செய்வேன். எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணிய மாட்டேன்’ என்று கவிஞர் முருகன் காட்டாக்கடா தெரிவித்துள்ளார்.

முற்போக்கு கலை இலக்கிய சங்கத்தின் காட்டாக்கடா வட்டாரக் குழுஏற்பாடு செய்திருந்த போராட்டத்தை துவக்கி வைத்து சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி சதீஷ் பேசுகையில், முருகன்காட்டாக்கடா கேரளாவின் விருப்பமான கவிஞர் மட்டுமல்ல, காட்டாக்கடாமக்களின் தனிப்பட்ட பெருமையும் கூட என்று கூறினார். ‘மனுஷ்யனாகணம்’ என்ற கவிதை எழுதிய முருகன்காட்டாக்கடாவுக்கு மரண அச்சுறுத்தலுக்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டாரதலைவர் கே.உபேந்திரன் தலைமை தாங்கினார்.சாகித்ய சங்கம் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ராகுல், சிபிஎம் காட்டாக்கடா பகுதிச் செயலாளர் ஜி ஸ்டீபன், பி.எஸ்.பிரஷீத் மற்றும் எஸ்.விஜயகுமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினர். நிகழ்ச்சியின் முடிவில், நூற்றுக்கணக்கான மக்கள்கைகோர்த்து நின்று முருகன் காட் டாக்கடாவின்  ‘மனுஷ்யனாகணம்’ கவிதையை உரக்கச் சொல்லி முழக்கமிட்டனர்.

;