india

img

விவசாயிகள் குடும்பத்தில் 104 பேருக்கு அரசு வேலை.... பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்....

சண்டிகர்:
ஒன்றிய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த10 மாதங்களாக தில்லியில் விவசாயிகள்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தபோராட்டத்தில், இதுவரை நூற்றுக்கணக் கானோர் உயிரிழந்துள்ளனர். எனினும், கடைசி விவசாயியின் உயிர் இருக்கும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று அறிவித்து சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் விவசாயிகள் குவிந்துள்ளனர்.இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக, தில்லி போராட்டத்தில் உயிரிழந்த  விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு வேலைவழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதனடிப்படையில், வியாழக்கிழமைநடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில், 104 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

;