india

img

பைஜு'ஸ் ஆன்லைன் இணையதளத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் 37% பேர் தேர்ச்சியா?  நம்பமுடியவில்லை விசாரணை நடத்த காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை ....

சிவகங்கை 
நாட்டின் முன்னணி ஆன்லைன் கல்வி பயிற்று நிறுவனமான பைஜு'ஸ் (BYJU'S) இல் எல்கேஜி முதல் ஐஏஎஸ் தேர்வு வரை அனைத்து விதமான படங்களும் பயிலலாம். படங்கள் பயில தனி வீடியோ வகுப்புகளும் உள்ளன.

இத்தகைய சிறப்புடைய பைஜு'ஸ் நிறுவனம் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.சமீபத்தில் வெளியான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில் மொத்தமுள்ள 761 ரேங்குகளில் 281 பேர் பைஜு'ஸ் (BYJU'S) இல் படித்தவர்கள் எனவும், முதல் 100 பேரில் 36 பேர் பைஜு'ஸ் இல் படித்து தேர்ச்சி பெற்றதாகவும் வெற்றி பெற்றவர்களின் புகைப்படத்துடன் டஜன் கணக்கில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது பைஜு'ஸ் நிறுவனம்.

நாட்டின் மிகப்பெரிய போட்டித் தேர்வில் ஒரு ஆன்லைன் மற்றும் ஒரே நிறுவன பயிற்சியில் எப்படி 37% பேர் தேர்ச்சி பெற முடியும்? நம்பமுடியவில்லை விசாரணை நடத்த காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெப்சைட்டில் விளக்கம் 

இலவசமாக ஆன்லைன்லில் நேர்காணல் ஒத்திகை நடத்தியதாகவும், அரை மணி நேரம் பங்கேற்றதாகவும், தங்களிடம் பயின்ற மாணவர்கள் என்ற பட்டியலில் சேர்த்து விட்டதாக  பைஜு'ஸ் வெப்சைட்டில் கூறப்பட்டுள்ளது. 

பைஜு'ஸ் நிறுவன விளம்பரங்கள் மற்றும் அதன் நிதி ஆதாரம் குறித்த விவரங்களை விசாரிக்க வேண்டியது அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம்  தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

;