india

img

அசாமில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்!

திஸ்பூர், பிப்.08-
அசாமில் இன்று 3.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 
அசாமின் நாகான் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் 1.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 3.7 ஆகப் பதிவானது என்று மாநில புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

;