india

img

அனுமார் பிறந்த மாநிலம் ஆந்திராவா, கர்நாடகாவா? ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்ளும் சாமியார்கள்....

அமராவதி:
அனுமார் பிறந்தது ஆந்திராமாநிலத்தில்தான் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியது, சாமியார்கள் இடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் ஹம்பி அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலையில்தான் அனுமன் பிறந்தார் என்பது பொதுவான நம்பிக்கையாக உள்ளது. இதற்குபுராண தகவல்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், கோயில் சிற்பங்கள் உள்ளிட்ட வடிவங்களில் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஆனக்குந்தி எனும் இடத்துக்கு அருகில் உள்ள கிஷ்கிந்தா தான் ராமாயணத்தில் வரும் வனப் பகுதி.இங்கு இருக்கும் அஞ்சனாத்ரியில்தான் அனுமன் பிறந்தார் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் வெளியிடவுள்ள புத்தகத்தில், ஆந்திராவின் சேஷாசல மலைத்தொடரிலுள்ள அஞ்சனாத்திரியில்தான் அனுமன் பிறந்ததாக கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றுக் கல்வியாளர்கள் அளித்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இதனை தாங்கள்கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள திருப்பதி தேவஸ்தானம், அனுமார் பிறப்பிடம் தொடர்பான தொடர்பான ஆதாரங் களை ஏப்ரல் 21 அன்று வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள் ளது.இதையொட்டி, சாமியார்களிடையே பெருத்த சர்ச்சை வெடித்துள்ளது. சேஷாசலம் மலைத் தொடரில் உள்ள அஞ்சனாத்திரி, அனுமனின் தாயார் தவம் செய்தஇடம்தான். அனுமன் பிறந்த இடம்அல்ல என்று அவர்கள் வாதிட்டு வருகின்றனர்.

;