india

img

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

2025ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் நாடு முழுவதும் 2,736 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
அதேவேளையில், 2024ல் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 48ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 85ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இந்தாண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களில், 54.84% பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், இது கடந்தாண்டு 35.29% ஆக இருந்தது. தேர்வாகியுள்ள அனைத்து மாணவர்களும் அடுத்தக்கட்டமாக நேர்முகத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.