ராஜ் பவன்களின் பெயர் மாற்றத்தை தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்திற்கு ‘சேவா தீர்த்’ (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
2016ஆம் ஆண்டில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் 'லோக் கல்யாண் மார்க்' என்று பெயர் மாற்றப்பட்டது. அதேபோல், ராஜ் பாத் (Rajpath) என்பது 'கர்த்தவ்யா பத்' (Kartavya Path) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சமீபத்தில், மாநில ஆளுநர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களான ராஜ் பவன்கள் 'லோக் பவன்' என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்திற்கு ‘சேவா தீர்த்’ (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
