india

img

நாடாளுமன்ற இரு அவைகளும் 4ஆவது நாளாக ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற இரு அவைகளும் 4ஆவது நாளாக இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதை அடுத்து 4ஆவது நாளாக மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைப்பு. மீண்டும் டிசம்பர் 2-ஆம் தேதி 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடுகிறது.