india

img

அனைத்து மொபைல் போன்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் - ஒன்றிய அரசு உத்தரவு

இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என ஒன்றிய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. 
ஐ.எம்.இ.ஐ மோசடிகளை தடுக்கும் பெயரில், இந்தியாவில் தற்போது விற்பனைக்கு உள்ள மொபைல் போன்களிலும் சாஃப்ட்வேர் அப்டேட் மூலமாக 90 நாட்களுக்குள் 'சஞ்சார் சாத்தி' செயலி இடம் பெற வேண்டும் எனவும், அதனை யாரும் un-install செய்யாத வகையில் இருக்க வேண்டும் எனவும் அனைத்து மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த உத்தரவுக்கு, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த அறிவிப்புக்கு ஆப்பிள் நிறுவனமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.