india

img

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலால் ஹார்முஸ்  நீரிணையை மூடுவதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடையை ஏற்பட்டுள்ளது.  எனினும், நாட்டில் போதுமான எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு 8 வாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில் உள்ளதாக ஒன்றிய பாஜக அரசு ஜம்பம் அடித்திருந்தது. அடுத்த 50 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், எல்பிஜி கையிருப்பு உள்ளதாக ஒன்றிய பெட்ரோ லியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் கூறியிருந்தார். ஆனால், கடந்த மார்ச் 7-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென எல்பிஜி சிலிண்டர் விலையை உயர்த்தி மோடி அரசு அறிவித்தது.
அதுமட்டுமன்றி, பொதுமக்கள் அதிக அளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வ தைத் தடுப்பதற்கு, இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை உபயோகிப்பவர்கள் மாற்று வழியைத் தேடிக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் உணவகங்களை மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது.