வெள்ளி, பிப்ரவரி 26, 2021

india

img

தெலங்கானாவில் லாரி ஆட்டோ மோதி விபத்து: 9 பேர் பலி

ஹைதராபாத், ஜன.22-
தெலங்கானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சிந்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) மாலை வேலைக்குச் சென்றுவிட்டு பயணிகள் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது, இந்த ஆட்டோ மீது லாரி மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், லாரியின் ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

;