india

img

கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி, தில்லியில் அவரது உருவப்படத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தில்லியில் உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

;