கவுகாத்தி உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், “புல் டோசர் நடவடிக்கை” என்ற பெய ரில் குற்றவாளிகள் எனக் கூறி அவர் களின் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன. அதாவது முஸ்லிம், தலித் மக்கள் சிறிய குற்றசம்பவங் களில் தொடர்பு இருந்ததாக தெரிய வந்தால் அவர்களின் வீடுகள் உட னடியாக இடிக்கப்பட்டன. ஆனால் “உயர்” சாதிகளைச் சேர்ந்தவர்கள், பாஜக குண்டர் களின் வீடுகளை பாஜக அரசுகள் இடிப்பதில்லை. குற்றச் சம்பவ பிரச்சனை மட்டுமின்றி ஆக்கிர மிப்பு என்ற பெயரில் கூட முஸ்லிம் மக்களின் வீடுகளை இடிக்கும் சம்பவம் பாஜக ஆளும் மாநிலங் களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பாஜக ஆளும் வடகிழக்கு மாநி லங்களில் ஒன்றான அசாமில் உச்ச நீதிமன்ற தடையை மீறி புல் டோசர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு
அசாம் மாநிலம் லக்கிபூர் மலைத்தொடரில் 118 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது பந்தர் மாதா ரிசர்வ் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் யானைகளுக் கும் - மனிதர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதால் பந்தர் மாதா ரிசர்வ் வனப்பகுதியை பாது காக்கப்பட பகுதியாக அம்மாநில பாஜக அரசு அறிவித்தது. அதன் படி செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களில் வங் காள முஸ்லிம் மக்கள் அதி கம் வாழும் பகுதியான கோல்பாரா கிராமத்தில் உள்ள 55 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள தாக கூறி 450 வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாகியது பாஜக அரசு. இதனால் கோல் பாரா கிராமத்திலிருந்து 2,000 குடும்பங்கள் அகதிகள் போன்று வெளியேறியுள்ளன.
வன்முறை : 2 பேர் உயிரிழப்பு
செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பந்தர்மாதா ரிசர்வ் வனப்பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களை குறிவைத்து அசாம் அர சின் புல்டோசர் நடவடிக்கை அரங் கேறி வருகிறது. இந்த புல்டோசர் நடவடிக்கையில் மசூதிகளும் இடிக்கப்பட்டதால் வனப்பகுதி கிராமங்களில் வன்முறைச் சம் பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த வாரம் நிகழ்ந்த வன் முறையில் 2 பேர் உயிழந்த நிலை யில், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற தடை உத்தரவு எச்சரிக்கையை மீறி ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முஸ்லிம் மக்களின் வீடுகளை இடித்து அவர்களை அகதி களாக வெளியேற்றியுள்ள அசாம் பாஜக அரசின் செயல் பாட்டிற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.