india

img

தில்லியில் 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைப்பு! - 7 பேர் கைது

தில்லி கரோல் பாக் பகுதியில் சட்டவிரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த 13 பயற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தில்லியில் கடந்த 27-ஆம் தேதி பெய்த கனமழையால், ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் இயங்கி வந்த பயிற்சி மையத்தின் நூலகத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து தில்லி முழுவதும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தள்ளது. இந்த நிலையில், சட்டவிரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த 13 பயற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.