india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கோழிக்கோடு
வயநாட்டில் மீண்டும் கனமழை

கேரள மாநிலம் வயநாட்டில் மேக வெடிப்பு நிகராக பெய்த கன மழையால் மேப்பாடி, சூரல்  மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரி வில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர்,  ராணுவத்தினர், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில்  மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி யது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்  மலை, முண்டக்கை பகுதிகளில் மீண்டும்  கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்  பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

புதுதில்லி
அனுராக் தாக்கூரின் சாதியப் பேச்சிற்கு வலுக்கும் கண்டனம்
“இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தால் மக்களவை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடை பெற்று வரும் நிலையில், செவ்  வாயன்று மக்களவை யில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்  கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தார். அப்பொழுது முன்  னாள் ஒன்றிய அமைச்  சரும், பாஜக எம்பி யுமான அனுராக் தாக் கூர், “சாதி  தெரி யாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்கள்” என ராகுல் காந்தி யை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.  நாடாளுமன்றத்தின் சிறப்பு உரிமையை பறிக்கும் வகையில் அனுராக் தாக்கூரின்  பேச்சு இருப்பதாக “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

புதனன்று மக்களவையில் கேள்வி  நேரம் தொடங்கியதும் ராகுல் காந்தி குறித்த விமர்சனத்துக்கு அமைச்சர் அனு ராக் தாக்கூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர். அப்போது ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் பேச முயற்சித்தனர். ஆனாலும் “இந் தியா” கூட்டணி எம்.பி.,க்கள் தொடர்ந்து வலுவாக முழக்கம் எழுப்ப அவை நட வடிக்கைகள்  சுமார் 20 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.

சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

பாஜக எம்.பி., அனுராக் தாக்கூர் பேசி யதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்  ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ்  பக்கத்தில் அவர் கூறுகையில், “செவ்வா யன்று நாடாளுமன்றத்தில் “தன் சாதி தெரியாதவர் சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி பேசுவதா?” என்று ராகுல் காந்தி குறித்து அனுராக் தாக்கூர் பேசினார். அந்த பேச்சை அனைவரும் கேட்க வேண்  டிய சிறந்த பேச்சு என்று பிரதமர் தனது  டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.  நாட்டின் மிக உயர்ந்த ஒரு அவையில் பாஜகவின் குரல் எவ்வளவு அவலத்தோடு  வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது பாருங்  கள்” என சு.வெங்கடேசன் எம்.பி., கண்ட னம் தெரிவித்தார்.

யுபிஎஸ்சி புதிய தலைவராக பிரீத்தி சுதன்

யுபிஎஸ்சி (யூனியன் பப்ளிக் சர்வீஸ்  கமிஷன்) தலைவராக இருந்த மனோஜ் சோனி தன்னுடைய பத விக்காலம் முடியும் முன்னரே ராஜினாமா  கடிதம் கொடுத்து ஓட்டம் பிடித்தார். இந் நிலையில், யுபிஎஸ்சி உறுப்பினராக உள்ள பிரீத்தி சுதன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பிரீத்தி சுதன் ஆந்திரப் பிரதேச கேட ரைச் சேர்ந்த 1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி  ஆவார். அரசு நிர்வாகத்தின் அனைத்துத்  துறைகளிலும் கிட்டத்தட்ட 37 வருட அனு பவம் கொண்ட பிரீத்தி சுதன், ஒன்றிய சுகா தாரச் செயலாளராக ஜூலை 2020 வரை மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். இதற்கு முன்பு பிரீத்தி சுதன் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளராக இருந்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை அதாவது அவர் 65 வயதை அடையும் வரை பிரீத்தி சுதன்   யுபிஎஸ்சி தலைவர் பொறுப்பில் இருப் பார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுதில்லி
தில்லியில் 4-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்

தில்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்ததில் 3 மாணவர் கள் உயிரிழந்தனர். இந்த விவகா ரத்தில் நடவடிக்கை மற்றும் நீதி கோரி யும், ஐஏஎஸ் பயிற்சி மையங்களில் போது மான அளவில் பாதுகாப்பு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளக் கோரியும் ராஜிந்  தர் நகர் பகுதியில் ஐஏஎஸ் பயிற்சி மைய  மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி  வருகின்றனர். இந்த போராட்டம் புத னன்றுடன் 4-ஆவது நாளை எட்டி யுள்ள நிலையில், மாணவர்களின் கோரிக்  கையை ஏற்காமல் தில்லி மற்றும் மோடி  அரசு மவுனம் காத்து வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடு பட்டு வரும் மாணவர்களில் ஒருவரான ராபின் கூறுகையில்,“எங்களுக்கு வெறும் உத்தரவாதங்கள் தேவையில்லை. உத்த ரவாதங்கள் எங்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும். எங்களுக்கு தேவை நடவடிக்கை மட்டுமே. போலீசார் எங்க ளின் போராட்டத்தை திசை திருப்ப முயற்  சிக்கின்றனர். மூன்று உயிர்கள் பறி போயிருக்கிறது. இது சாதாரண விஷ யம் இல்லை. இந்தப் போராட்டம் சிறிய  அளவிலேயே நடக்கிறது. அது மிகப் பெரிய அளவில் மாறவேண்டும். கோரிக்  கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” என  அவர் கூறினார்.

புதுதில்லி
பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தியை சாதி ரீதியிலாக இழிவுபடுத்திய பாஜக எம்.பி., அனுராக் தாக்கூரின் அவதூறான உரை யை அவை குறிப்பில் இருந்து சபாநாயகர்  ஓம் பிர்லா நீக்கினார்.

ஆனால் அனுராக் தாக்கூரை பிரத மர் மோடி பாராட்டி டுவீட் செய்தார். அதில்,  “என்னுடைய இளம் மற்றும் ஆற்றல் மிகுந்த சக எம்.பி. அனுராக் தாக்கூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேட்க வேண்  டும்” எனக் கூறி வீடியோ தொகுப்புடன் கூடிய பதிவை பதிவிட்டார்.

இந்நிலையில், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை டுவிட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடிக்கு எதி ராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது. அவை உரிமையை மீறி யதாக பிரதமர் மோடி மீது நடவடிக்கை கோரி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா வுக்கு கடிதம் அனுப்பினார் காங்கிரஸ்  எம்.பி., சரண்ஜித் சிங். அக்கடிதத்தில்,  “அவை விதிகளின்படி பிரதமருக்கு எதி ராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு  வர அனுமதிக்க வேண்டும்” என குறிப்பி டப்பட்டுள்ளது.