india

img

உச்சநீதிமன்ற எச்சரிக்கையை அடுத்தடுத்து மீறும் பாஜக ஆளும் மாநிலங்கள்

அகமதாபாத் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், “புல்டோசர் நடவடிக்கை” என்ற பெயரில் குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன. அதாவது முஸ்லிம், தலித்துக்கள் சிறிய குற்றச் சம்பவங்களில் தொடர்பு இருந்ததாக தெரியவந்தால் அவர் களின் வீடுகள் உடனடியாக இடிக் கப்பட்டன. ஆனால் குற்றம் சாட்டப் பட்ட உயர்சாதிகளைச் சேர்ந்த வர்கள் மற்றும் பாஜக குண்டர்க ளின் வீடுகளை பாஜக அரசுகள் இடிப்பதில்லை. குற்றச்சம்பவ பிரச்சனை மட்டுமின்றி ஆக்கிர மிப்பு என்ற பெயரில் கூட முஸ்லிம் மக்களின் வீடுகளை இடிக்கும் சம்ப வம் பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரு கின்றன. இந்த புல்டோசர் நடவ டிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், கடந்த வாரம் அசாம் பாஜக அரசு ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டப்பட்டு ள்ளதாக கூறி, 450க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது. இதனை தொடர்ந்து குஜராத் பாஜக அரசும் உச்சநீதிமன்ற எச்ச ரிக்கையை மீறி 1200 ஆண்டுகள் பழமையான தர்காவையும், மசூதியையும் இடித்து மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டுள்ளன.

அறிவிக்கப்படாத ஊரடங்கு : 135 பேர் கைது 

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது சோமநாத் கோவில். இந்த கோவிலுக்கு அருகில் 1200 ஆண்டுகள் பழ மையான தர்கா மற்றும் மசூதி, கல்ல றைகள் உள்ளன. இந்து கோவி லுக்கு அருகில் எப்படி தர்கா, மசூதி இருக்கலாம் என பாஜக -  ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கும்பல் கள் மசூதி நிர்வாகத்துடனும், அப் பகுதி முஸ்லிம் மக்களுடனும் கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், திடீரென குஜராத் பாஜக அரசு சனியன்று காலை அரசு ஆக்கிரமிப்பு நிலம் எனக் கூறி 58 புல்டோசர்கள், 52  டிராக்டர்கள் போன்றவற்றை பயன் படுத்தி 1200 ஆண்டுகள் பழமை யான தர்கா மற்றும் மசூதியை இடித்து தள்ளியது. 788 மாநில ரிசர்வ் போலீசார், மூன்று காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு துணை காவல் கண்காணிப்பாளர் கள், 12 காவல் ஆய்வாளர்கள், 24 துணை ஆய்வாளர்கள் தர்கா மற்றும் மசூதி இருக்கும் பகுதி யான வெராவல் பகுதியில் குவிக் கப்பட்டு இருந்தனர். புல்டோசர் நடவடிக்கைக்கு முன்பு 135 பேரை குஜராத் போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். சிலர் வீட்டுக்காவலிலேயே வைக் கப்பட்டு இருந்த நிலையில், அவர்க ளை இன்று வரை போலீசார் வெளி யில் நடமாட அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கண்டனம்

உச்சநீதிமன்ற எச்சரிக்கையை மீறி 1200 ஆண்டுகள் பழமையான ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான தர்காவை குஜராத் பாஜக அரசு இடித்ததற்கு, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர் கண்டனம் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”1200 ஆண்டுகள் பழமையான ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இருந்த தர்கா மற்றும் மசூதியை குஜராத் அரசு இடித்துத் தள்ளியது. குஜராத் பாஜக அரசு மசூதி மற்றும் தர்கா வை மட்டும் இடித்து தள்ள வில்லை, உச்சநீதிமன்ற உத்தரவை யும் வெட்கமின்றித் தகர்த்துள்ளது. இந்தச் செயல் நீதித்துறையின் அதிகாரத்தை முற்றிலும் புறக்க ணிப்பதைக் குறிக்கிறது. இத்த கைய அலட்சியப் போக்கை மன்னிக்க முடியாது” என அவர் கூறினார்.