india

img

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி

புதுதில்லி, மார்ச்.3 -
தில்லியில் நடைபெற்ற 5 மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
தில்லியில் ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி, சவுகன் பன்கர் ஆகிய 5 மாநகராட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது.
327 வாக்குச்சாவடி மையங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்து இருந்தனர்.
இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி ஆகிய 4 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றது.

;