ராஜஸ்தான் மாநிலம் சிகார் மக்களவை தொகுதியின் “இந்தியா” கூட்டணி வேட்பாளராக களம் கண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், விவசாயிகள் சங்க தலைவருமான அம்ரா ராம் 72,896 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சிபிஎம் மாநிலக் குழு அலுவலகத்திற்கு வருகை தந்த அம்ரா ராமிற்கு கட்சி ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்