திங்கள், செப்டம்பர் 27, 2021

india

img

11.39 சதவிகிதத்தை எட்டிய மொத்தவிலைப் பணவீக்கம்.... தொடர்ந்து நான்காவது மாதமாக அதிகரிப்பு.....

புதுதில்லி:
இந்தியாவில் 2021 ஆகஸ்ட் மாதத்துக்கான (தற்காலிகம்) மற்றும் ஜூன் மாதத்துக்கான (இறுதி) மொத்த விலைக் குறியீட்டு எண்களை (அடிப்படை ஆண்டு: 2011-12), தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ளநிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிட மிருந்து பெறப்பட்ட மொத்த விலைக் குறியீட்டின் (WPI) தற்காலிகப் புள்ளிவிவ ரங்கள், ஒவ்வொரு மாதமும் 14-ஆம் தேதி (அல்லது அடுத்த வேலை நாளில்) வெளியிடப்படும். 10 வாரங்களுக்குப்பின், இந்தக் குறியீட்டு எண்கள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.இதன்படி 2021 ஆகஸ்ட்மாதத்துக்கான ஆண்டு பணவீக்க விகிதம் 11.39 சதவிகிதம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. இதன்மூலம், மொத்தவிலை பணவீக்கம், தொடர்ந்து ஐந்தாவது மாதமாக இரட்டை இலக்க உயர்வைக் கண்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 11.16 சதவிகிதமாக இருந்தது, ஆகஸ்டில் மேலும் 23 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் 0.41 சதவிகிதம் என்ற அளவிலேயே மொத்தவிலைப் பணவீக்கம்இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருட்கள் விலை குறைவாக இருந்தபோதிலும், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால், மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்துள்ளது என,ஒன்றிய அரசின் வர்த்தகம்மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு, உணவுப்பொருட்கள் அல்லாத வற்றின் விலை அதிகரித்ததே முக்கிய காரணம் என்றும்கூறியுள்ளது.குறிப்பாக கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலி யம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன், அடிப்படையான உலோகப் பொருட்கள், தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள், ஜவுளி, ரசாயனப் பொருட் கள் ஆகியவற்றின் விலையும் கடந்த ஆண்டு ஆகஸ்டை விட அதிகரித்துள்ளது.உணவுப் பொருட் களைப் பொறுத்தவரை, வெங்காயம் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.

;