வெள்ளி, பிப்ரவரி 26, 2021

india

img

குடியரசு தின அணிவகுப்பில் வங்கதேச படைகள் பங்கேற்பு....

புதுதில்லி:
இந்திய குடியரசு தினவிழா அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேசநாட்டின் படைகள் பங்கேற்கின்றன. 

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி  26 ஆம் தேதி தில்லியில் நடைபெறுகின்ற பிரம்மாண்டமான விழாவில்  இந்தியமுப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இந்த ராணுவ அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்கிறது. வங்காளதேசம் நாடு விடுதலை பெற்ற 50-வது ஆண்டு நிறைவை யொட்டி இந்த அணிவகுப்பில் அந்த நாடும் கலந்து கொள்கிறது. அந்த நாட்டின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் அடங்கிய குழுவினர், இந்த ஆண்டு அணிவகுப்பில் முதலில் செல்வார்கள். இந்த அணிவகுப்பில் வங்காளதேச ராணுவ இசைக்குழுவினரும் பங்கேற்பார்கள்.இதற்கு முன்னதாக பிரான்ஸ்(2016), அமீரக (2017) நாடுகளின்படைகளும் இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றுள்ளன.

;