வியாழன், பிப்ரவரி 25, 2021

india

img

மேற்கு வங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

கொல்கத்தா, ஜன.28-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் 60 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை போராட்டக்களத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசுடனான அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.

குடியரசு தினத்தன்று அமைதியான முறையில் நடந்த டிராக்டர் போரணியை தடுத்த காவல்துறையினர் டிராக்டர்களை தாக்கியதுடன் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டு வீச்சு என பெரும் அராஜகத்தை அரங்கேற்றினர்.

இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஜெய் ஸ்ரீ ராம்' எனக் கோஷமிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக,  கேரளம், பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தில்லி  மற்றும்  புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

;