health-and-wellness

img

புற்றுநோயாளிகளில் 7.9 % பேர் சிறுவர்கள் : என்சிஆர்பி தகவல் 

இந்தியா : கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 7.9 சதவீதம் பேர் சிறுவர்கள் என என்சிஆர்பி மேற்கொண்ட ஆய்வின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது .

தேசிய புற்றுநோய் பதிவு திட்டம் , கடந்த 2012 முதல் 2019 வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது . இந்த ஆய்வில் , புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 6.10 லட்சம் பேரில் 52.4 சதவீதத்தினர் ஆண்கள் என்றும் , 47.6 சதவீதத்தினர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் , பிறந்த சிசு முதல் 14 வயது வரையிலானவர்கள் 7.9 சதவீதத்தினர் என்று கண்டறியப்பட்டுள்ளது .

இந்நிலையில் , புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்களில் 48.7 சதவீதத்தினரும் , பெண்களில் 16.5 சதவீதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்  .

மேலும் , இந்த ஆய்வின்படி , 2012 முதல் 2019 வரை என்சிஆர்பி-யின் கீழ் இயங்கி வரும் 96 மருத்துவமனைகளில் 13,32,207 பேருக்குப் புற்றுநோய் பதிவு செய்யப்பட்டுள்ளது . ஆனால் , அவர்களில் 6,10,084 பதிவுகள் மட்டுமே பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது .

 

;