headlines

img

தீருமா மின் நெருக்கடி?

ஒன்றிய பாஜக அரசு ஒரு பிரச்சனை முன் னுக்கு வந்தால் அதை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று ஒரே போடாக போட்டு அமுக்கி விடவே முயற்சிக்கும். அப்படித்தான் தற்போதைய நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சனையையும் கையாள் கிறது. ஆனால் உண்மை நிலை அவர்களுக்கு எதி ராகவே உள்ளது.

நாட்டில் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் 108 நிலையங்களில் கடும் பற்றாக்குறை நிலவுகி றது. 30 நிலையங்களில் ஒருநாள் இருப்பே உள்ளது என்பதும் 70 நிலையங்களில் 4 நாள் இருப்பே இருக்கிறது என்பதும் நிலைமையின் தீவிரத்தை  உணர்த்துகிறது. ஆனால் ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பீதியை உருவாக்குகி றார்கள் என்று மாநில முதல்வர்கள் மீது பாய்கிறார். ஆனால் அவரே தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் கவலை தெரிவித்துள் ளன என்றும் கூறியிருக்கிறார்.

இந்த நிலக்கரி பற்றாக்குறை சீனாவில் கூட இருக்கிறது என்றும் மழைக்காலம் தான் நிலக்கரி உற்பத்தி குறைவுக்கு காரணம் என்றும் கூறுகிறார். அத்துடன் பொதுவாக குளிர் காலத்தில் மின்சார நுகர்வு குறைவாக இருக்கும். ஆனால் தற்போது நுகர்வு அதிகரித்துள்ளது என்று மக்கள் மீதும் தொழில் துறையினர் மீதும் பழிபோடுகிறார்.

கடந்தாண்டு கொரோனா பொதுமுடக்கத்தின் போது மூடிக்கிடந்த தொழில்துறை தற்போது இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியிருப்பது பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கா மல் இருந்தது ஒன்றிய அரசின் தவறாகும். இதை சமாளிப்பதற்காக இயற்கையின் மீதும் குறை கூறுகிறது ஒன்றிய அரசு.

ஆனால் இந்த நிலக்கரிப் பற்றாக்குறையை சமாளிக்க இறக்குமதி செய்தாவது மின் உற்பத்தி குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். ஏன் எனில் இந்த பிரச்சனை இன்னும் 5 அல்லது 6 மாதங்களுக்கு நீடிக்கும் என்று ஆர்.கே. சிங் கூறி யிருப்பதை மனதில் கொண்டு ஒன்றிய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் கோல் இந்தியா நிறுவனத்திடம் 4 கோடி டன் நிலக்கரி இருப்பு உள்ளது என்று நிலக்க ரித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்றா லும் இதுவும் கூட மாநிலங்களின் தேவைக்கு 20 நாட்களே தாங்கும். ஆனால் நிலைமையோ மோச மாக உள்ளது.

தற்போது பஞ்சாபில் சுழற்சி முறையில் மின்தடை அமலில் உள்ளது. கேரளாவில் வரும் 19 ஆம் தேதி முதல் மின்தடை அமலாகப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தில்லி  இருளில் மூழ்கும் என்று முதல்வர் எச்சரித்துள் ளார். எனவே வெறும் சமாளிப்புகளும் மறுப்புக ளும் பிரச்சனைக்கு தீர்வு தராது.

பிரதமர் மோடி தனது ஆஸ்திரேலிய பய ணத்தின் போது அதானியை அழைத்துச் சென்று நிலக்கரிச் சுரங்கம் வாங்கியது இப்போதாவது பயன்படுமா இந்தியாவுக்கு? இல்லை, சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை அதிகரிப்பு என்று மீண்டும் அதானிக்குத் தான் பயன்படுமா? திங்க ளன்று ஒன்றிய அமைச்சர்களுடன் அமித்ஷா  நடத்திய  ஆலோசனையாவது நிலக்கரி தட்டுப் பாட்டைத் தீர்க்க, மின்சார நெருக்கடியை போக்க உதவுமா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

;