headlines

img

மோடி வழியில் ராஜபக்சே

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை தொடர்ந்து மறுத்துவரும் கோத்தபய ராஜபக்சே யின் அரசு, ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’  எனும் பெய ரில் புதிய சட்ட வரைவு ஒன்றை உருவாக்கியி ருப்பது, மொழி மற்றும் இன சிறுபான்மை மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

“தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்க ளுக்கு எதிராக 1948 ஆம் ஆண்டிலிருந்து நடை முறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே இந்த சட்ட வரைவு” என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்துள்ளார். 

இலங்கை, ஒரே நாடு அல்ல. பல இனங்கள், பல மொழிகள், பல மதங்கள் கொண்ட - பன்முக கலாச்சாரம் கொண்ட - இந்தியாவைப் போன்ற ஒரு ஒன்றியம்தான் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. சிங்களர்கள், தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள், மலையக மக்கள்; பவுத்தம், இந்து, கிறிஸ்தவம் உள்பட பல தரப்பு மக்கள் வாழும் பூமி இலங்கை. பிரதேச அளவிலும் வேறுபட்ட கலாச்சாரங்களும், பழக்கவழக்கங்க ளும் இருக்கும் நாடு. இங்கு எப்படி ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ வரையறை பொருந்தும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

சர்வாதிகாரத்தை நிலைநாட்ட விரும்பும் ஆட்சியாளர்கள் மக்களை ஒடுக்குவதற்கு இது போன்ற சட்டங்களை உருவாக்கிட முனை கிறார்கள். இந்தியாவில் மோடி அரசு என்ன செய்ததோ அதை இலங்கையில் கோத்தபய ராஜபக்சே செய்ய முயற்சிக்கிறார். 

தமிழுக்கும் தமிழருக்கும் என ஒரு தனித்த அடையாளம் இலங்கையில் பண்டைக்காலம் தொட்டே இருந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை என்பது சிங்கள, பவுத்த நாடு என்பதும் அதனடிப்படையில் இந்த நாட்டை ஒரே நாடாக அடையாளப்படுத்த வேண்டும் என்பதுமே ராஜபக்சேயின் நோக்கம். 

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த மோடி அரசு அதை செயல்படுத்து வதற்காக மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. நாடு முழுவதும் இதற்கு எதிராக பெரும் எழுச்சி ஏற்பட்டது. இதனால் அரசு சற்று பின்வாங்கியதுபோல தோற்றமளித்தாலும், அதிலிருந்து விலகவில்லை. இப்போதும் கூட நாடு முழுவதும் பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் பணியை ஒன்றிய அரசே மேற்கொள்ளப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

இத்தகைய நடவடிக்கைகளின் நோக்கம், தேசத்தின் பன்முகக் கலாச்சாரத்தை அழித்தொ ழித்து ஒற்றை ஆதிக்கமாம் இந்துத்துவாவை நிலைநாட்டுவதற்கான முயற்சியே. அதே போன்று இலங்கையில் சிங்கள பவுத்தத்தை அடிப்படை யாக கொண்ட ஒற்றை ஆதிக்கத்தை, ஒற்றைக் கலாச்சாரத்தை நிலை நாட்டுவதற்கான துவக்கப் புள்ளியாக கோத்தபய ராஜபக்சே அரசு ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் வரைவுச் சட்டத்தை உரு வாக்கியுள்ளது. 

இது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் இயக்கங்கள் அனைத்தும் வலுவாக இதை எதிர்த்து நின்று, தடுத்து நிறுத்தட்டும்!

;