headlines

img

அசாமிலும் அட்டூழியம்

பள்ளிக்குள் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக எழுந்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை  அசாம் மாநில காவல் துறை கைது செய்துள்ளது.  பாஜக ஆளும் அம்மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்யப் படவில்லை, ஆனால் 2021 இல் கொண்டு வரப்பட்ட அசாம் கால்நடைப் பாதுகாப்பு திருத்தச் சட்டம், மாநிலத்தில் இந்துக்கள்,  சமணர்கள்  மற்றும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் சில பகுதிகளிலும் அல்லது கோவில் அல்லது வைணவ மடங்களுக்கு 5 கி.மீ சுற்றளவிற்குள்ளும் மாடு அறுப்பதையும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதையும் தடை செய்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்து, கடந்த ஆறு ஆண்டுகளில் “ மாடு வணி கத்தில்” சம்பாதித்த பணம் எவ்வளவு? அதனால் வாங்கிய சொத்துக்கள் என்ன?  அப்படி சொத்துக் களை வாங்கியிருந்தால் அதைச் சோதனை செய்யவும்  பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு புதிய சட்டம் அதிகாரம் அளிக்கிறது. மூன்றில் ஒரு பங்கு இஸ்லாமியர்கள் வசிக்கும் அசாம் மாநிலத்தில் இது மிக மோசமான சட்டமாகும். 

இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள 56 வயதாகும் தலிமா நெஸ்ஸா  அங்குள்ள ஆங்கில நடுநிலைப் பள்ளியில்  தலைமை யாசிரியராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் கடந்த 14 ஆம் தேதி தனது மதிய உண வுக்காக சமைக்கப்பட்ட மாட்டிறைச்சியைக் கொண்டு வந்திருந்தார்.  இதற்காக அவர் மீது வழக்குபதிவு செய்திருப்பதும் கைது செய்திருப்ப தும் கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும். 

அசாமில் 2016இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்படுவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே 2017-ல், மூன்று முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். மாட்டிறைச்சியை வெளிப் படையாகக் கொண்டு சென்றார் என்று கூறி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மாட்டிறைச்சியை சாதி, மத பேதமின்றி பல தரப்பினரும் உண்கின்றனர். கோடிக்கணக் கான மக்களின் உணவாகவும், வாழ்வாதாரமாக வும் இது உள்ளது. நமது நாட்டில் 75 விழுக் காட்டினர் புலால் உணவு உண்கின்றனர். நட்சத்திர உணவு விடுதிகளில் மாட்டிறைச்சி விரும்பி உண் ணப்படுகிறது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் என்ன உண்ண வேண்டும், என்ன உண்ணக் கூடாது என்பதை அவரவர் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்ய அரசியல் சாசனம் உரிமை வழங்கி யுள்ளது. அந்த உரிமையை பாஜக அரசுகள் அராஜகமாகப் பறித்து வருகின்றன. அதுமட்டு மின்றி, மாட்டிறைச்சி என்றாலே அது பசுவின் இறைச்சிதான் என்று சித்தரிக்க முயற்சிக்கிறது. இது முற்றிலும் பொய்யான பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரத்தின் விளைவாக கால்நடை வணிகமும் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான, பாதக மான விளைவுகளை சந்தித்துள்ளது.

முஸ்லீம்களை எதிரிகளாகக் காட்டவும், இந்துக்களின் வாக்குகளை “பசு-புனிதம்” என்ற பெயரால் திரட்டவும் ஆர்.எஸ்.எஸ். - பாஜக முன் னிறுத்தும் மாட்டிறைச்சி அரசியலின் பின்னணி யின் கொடூரத்தை அம்பலப்படுத்துவதும் தடுத்து நிறுத்துவதும் அவசியமாகும்.

;