headlines

img

அதே பாசிச பாதை.... (மம்தாவின் அட்டூழியம்)

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான 36 மணி நேரத்தில் 14 படுகொலைகள் நடந்திருக்கின்றன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னணி ஊழியர் காகாளிசேத்திரபால் மிக கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டிருக்கிறார். இடதுசாரிகளின் வீடுகள்சூறையாடப்பட்டிருக்கின்றன. இது அரசியலமைப்புசட்டம் வழங்கியுள்ள ஜனநாயகம் மற்றும் சிவில் உரிமைகள் மீதுநம்பிக்கையுள்ள ஒவ்வொரு குடிமகனும், எந்தகட்சியை சார்ந்தவராக இருந்தாலும் கவலைப்படவேண்டிய விஷயம் ஆகும். திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களும், அதன் தலைவர் மம்தாபானர்ஜியும் அரங்கேற்றியுள்ள இந்த கொடூரம் கடும் கண்டனத்திற்கு உரியது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் வாக்களிப்பதன்மூலம் ஓர் அரசை ஆட்சி அதிகாரத்திலிருந்து இறக்கவும்  முடியும், ஆட்சி அதிகாரத்தை நீட்டிக்கவும் முடியும்.  அவ்வாறு ஏற்படும் மாற்றம் அமைதியான முறையில் நிகழ வேண்டும். அதுதான்ஜனநாயகத்தின் அடித்தளம். அந்த அடித்தளத்தையே தகர்த்து ஜனநாயகப் படுகொலையை மேற்குவங்கத்தில் அரங்கேற்றி வருகிறது  மம்தா அரசு.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஐ எதிர்த்து போராடுகிறேன் என மம்தா கூறிக் கொள்கிறார். ஆனால்உண்மையில் மம்தாவும் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-சின் பாதையிலேயே செல்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. பாஜக இந்திய அரசியலில்  எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க முயல்கிறது. அதே போன்றுதான் மம்தாவும் எதிர்க்கட்சிகளே இல்லாத பஞ்சாயத்து முறையை உருவாக்குவேன் என அறைகூவல் விடுத்தார்.  அதனை கடந்தமேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் அவரது கட்சியோடு, காவல்துறையையும் இணைத்து வன்முறைமூலம் அரங்கேற்றினார்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் திரிணாமுல்காங்கிரஸ் கட்சியின் ரவுடிக்கும்பல்களால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 221 முன்னணி ஊழியர்கள்படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.பல்லாயிரக்கணக்கானோர் சொந்த வீடுகளில் இருந்துவெளியேற்றப்பட்டிருக்கின்றனர். மாநிலம் முழுவதும்ஒரு லட்சத்திற்கும் அதிமான பொய்வழக்குகள் இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது போடப்பட்டிருக்கின்றன. மேற்கு வங்கம் முழுவதும் பலபகுதிகளில் திரிணாமுல் காங்கிரசின் கட்டளைக்குஅடிபணிய மறுக்கிற ஒவ்வொருவரும் அச்சுறுத்தலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். 

மேற்கு வங்கத்தில் எப்படியாவது மதவெறி அரசியலை கட்டவிழ்த்து விட்டு, முற்றிலும் வகுப்புவாத அரசியலாக மாற்ற ஆர்எஸ்எஸ் மற்றும்பாஜக முயல்கின்றன. மறுபுறம் பாசிச வழிமுறையில்போட்டி வகுப்பு வாதத்தையும் தனது அதிகாரத்தின் மூலம் எதேச்சதிகார ஆட்சியையும் உருவாக்கமம்தா முயல்கிறார். இது மேலும் வகுப்புவாதத்திற்கு வலுவூட்டுவதுடன், ஜனநாயகத்தையும்புதைகுழியில் தள்ளும்.மத்திய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து கடந்த நவம்பர் 26 அன்றுபொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.அப்போதுமோடி அரசிற்கு ஆதரவாக போராடுவோர் மீதுமிருகத்தனமான அடக்குமுறை ஏவியது மம்தாவின் அரசு. அதில் காவல்துறை தாக்கியதில் மைதுல் என்கிறவாலிபர் சங்க முன்னணி ஊழியர் உயிரிழந்தார். ஒரு போதும் பாசிசத்திற்கு மாற்று பாசிசம் அல்ல.

;