headlines

img

தளரும் கட்டுப்பாடுகள் உயரும் சிமெண்ட் விலை

தமிழகத்தில்  கடந்த சில நாட்களாக  சிமெண்ட்  விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.350 என்ற விலையில் விற்ற சிமெண்ட்  விலை தற்போது ரூ.450 முதல் ரூ.470 ஆக உயர்ந்து விட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூட்டை ஒன்றுக்கு ரூ.120 வரை உயர்ந்திருக்கிறது. சிமெண்ட் விலை உயர்ந்து வருவது  கட்டுமானத்துறையையும், அதைச் சார்ந்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பெரிதும் பாதித்துள்ளது. 

சிமெண்ட் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி யின் விலை உயர்ந்து வருவதால், சிமெண்ட்  விலை ரூ.60 வரை உயரக்கூடும் என்று  இம்மாத துவக்கத் தில் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே சிமெண்ட் விலை,  இரு மடங்கு,  அதாவது ரூ.120 வரை அதிகரித்துவிட்டது. சிமெண்ட் நிறுவனங்கள் விலையை உயர்த்த நிலக்கரி தட்டுப்பாட்டை ஒரு சாக்காக பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிகிறது. 

நிலக்கரி தட்டுப்பாடு என்பது தமிழகம் மட்டுமல்ல; நாடு முழுவதும், ஏன்  உலகம் முழு வதும் நிலவுகிறது. இருப்பினும் பிற மாநிலங் களிலோ அல்லது வெளிநாடுகளிலோ சிமெண்ட் விலை உயரவில்லை. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் இப்போதும் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.350 என்ற அளவில் கட்டுக்குள்  உள்ளது. இதனால் மாநி லத்தின் வடமாவட்டங்களில் உள்ள  கட்டுமான நிறு வனங்கள் ஆந்திராவிலிருந்து ரூ.350-க்கும் குறை வான விலையில்  சிமெண்ட்டை இறக்குமதி செய்கின்றன. 

காரணம் இல்லாமல் சிமெண்ட் விலை உயர அதன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார்  நிறுவனங்களுக்குள் உள்ள “கார்டெல்” எனப்படும் மறைமுக கூட்டுதான் காரணம். எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலை யிட்டு சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கவேண்டும்.  ஏற்கனவே அரசு எடுத்த நடவடிக்கையால் சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.30 குறைந்தாலும் தொடர் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்ந்த  காரணத்தால் மீண்டும்  விலை உயர்ந்துவிட்டது. 

இந்நிலையில் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, டான்செம் நிறுவனத்தின் சிமெண்ட் உற்பத்தி 17 லட்சம் டன்னாக உயர்த்தப்படு வதாக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கது. மேலும் சட்டப்பேரவையில் அரசு அறி வித்தவாறு “வலிமை” சிமெண்ட்டை விரைவாக விற்பனைக்கு கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டி லுள்ள சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களின் பிரதி நிதிகளை அரசு அழைத்துப் பேசி சிமெண்ட் விலை யைக்  குறைக்கும்படி அறிவுறுத்த வேண்டும். இதன் பிறகும் சிமெண்ட் விலை உயர்ந்தால்  மாநில அரசு  உறுதியான நடவடிக்கை எடுக்கத் தயங்கக்கூடாது.

வெளிநாடுகளிலிருந்து மிகக்குறைந்த விலையில் சிமெண்டை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் அரசு பரிசீலிக்கலாம். இதன் மூலம் சிமெண்டை அரசே இறக்குமதி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். கட்டுமான பணி என்பது வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகிய வற்றுடன் தொடர்புடையது என்பதால் சிமெண்ட் விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது  அவசியமான ஒன்றாகும்.

;