headlines

img

திரிபுரா நகராட்சி தேர்தலில் ஜனநாயகப் படுகொலை

எதிர்பார்த்தது போலவே திரிபுரா மாநில நகராட்சித் தேர்தலில் ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது அங்கு ஆளும் பாஜக அரசு. வன்முறைகள், வாக்குச்சாவடிகளை கைப் பற்றுவது, தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்த வாக்காளர்களை தடுத்து நிறுத்து வது, இந்த அராஜகங்களை தடுக்க முற்பட்ட இடது முன்னணி ஊழியர்களை - வேட்பாளர்க ளை குண்டர்களை ஏவி தாக்குவது.. என அட்டூழி யங்களை நிகழ்த்தியுள்ளது பாஜக.

திரிபுரா தலைநகரான அகர்தலா மாநகராட்சிக் கும் இதர 19 நகர்மன்றங்களுக்கும் நவம்பர் 25 அன்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்கு முன்பே எதிர்க்கட்சியினர் யாரையும் வேட்புமனு தாக்கல் செய்ய விடக்கூடாது என்ற இழி நோக்கத்து டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி தலைவர்கள், ஊழியர்கள் மீதும் கட்சியின் அலுவலகங்களை குறிவைத்தும் மிகப் பெரும் வன்முறை வெறியாட்டத்தை பாஜக அரங் கேற்றியது. அதுமட்டுமல்ல, மாநிலத்திற்குள் எப்படியேனும் மதவெறிக் கலவரங்களை நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்லாமியர்க ளை குறிவைத்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தியது. ஆனால் வன்முறையின் மூலம் நகராட்சித் தேர்தலில், போட்டியில்லாமல் பெரு வாரியான இடங்களை கைப்பற்றிவிடலாம் என்று எண்ணிய திரிபுரா பாஜகவின் கனவு பலிக்க வில்லை. இடது முன்னணியின் தரப்பில் தேர்தல் களத்தில் கடுமையான எதிர்ப்பை ஆளும் பாஜக அரசு சந்தித்தது. முன்னாள் முதல்வரும், மார்க் சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னருமான மாணிக் சர்க்கார் உள்ளிட்ட தலைவர் கள் பங்கேற்ற பிரச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். இது பாஜக அரசுக்கு ஆத்திரத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் நடைபெற்ற வாக்குப்பதி வின்போது, அகர்தலா மாநகராட்சி, தர்மநகர், கோவாய், பெலோனியா, மேலகர் ஆகிய நக ராட்சிகளில் ஆயுதங்களுடன் வந்த பாஜக குண்டர் கள் வாக்குச்சாவடிகளை கைப்பற்றினர். எதிர்த்து நின்ற இடது முன்னணியின் வாக்குச்சாவடி முக வர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். வாக்களிக்க வந்தவர்களையும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வாக்குச்சாவடிகளிலிருந்து வெளியேற்றினர். 

இதனிடையே தேர்தல் நடப்பதற்கு முன்பே ஏழு நகராட்சிகளில் பாஜக வேட்பாளர்களே வெற்றிப் பெற்றதாக ஜனநாயக விரோதமாக அறிவித்து கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். பனிசாகர், சப்ரூம், சோனாமுரா, குமார்கட், அமர்பூர் ஆகிய பேரூராட்சிகளிலும் வாக்குச்சாவடிகளை கைப் பற்றி பாஜக குண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

திரிபுராவில் நேர்வழியில் மக்கள் செல்வாக்கைப் பெற முடியாத ஆளும் பாஜக அரசு, வன்முறையை ஏவி ஜனநாயகப் படுகொலை செய்து நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களை கைப்பற்றுவதற்காக நடத்தியுள்ள இந்த அராஜகம் 24 மணிநேர தேசிய ஊடகங்களில் முக்கியத்துவம் பெறவில்லை. இந்தியாவின் வடகிழக்கு எல்லையோரத்தில் உள்ள மாநிலத்தில் பாஜக மேற்கொண்டுள்ள அட்டூழியங்களுக்கு எதிராக ஜனநாயக உள்ளம் கொண்ட ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டியது அவசியம்.

;