headlines

img

உலகை அச்சுறுத்தும் கொரோனா புதிய திரிபு

கெரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் மெல்ல விடுபட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளை யில் பி.1.1.529 என்றழைக்கப்படும் 50 பிறழ்வுகளைக் கொண்ட புதிய வகை கொரோனா திரிபு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முதலில் தென்னாப்பிரிக்கா வில் கண்டறியப்பட்ட இந்தத் திரிபு ஹாங்காங், பெல்ஜியம், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய  நாடுகளில் இருப்பது இதுவரை உறுதியாகியுள்ளது.   உலக சுகாதார அமைப்பால்  ‘ஓமிக்ரான்’  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரிபு ‘கவலைக்குரிய திரிபு’  என வகைப்படுத்தப்பட்டுள்ளதால்  உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.  இத்திரிபு வேகமாகப் பரவும் அபாயம் கொண்டதாக மருத்துவ நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அதிக பிறழ்வுகள் என்றாலே ஆபத்தானவை என்று பொருள் அல்ல, அந்த பிறழ்வுகள் என்ன செய்கின்றன என்பதை அறிந்து  கொள்வது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தத் திரிபின் இயல்பு காரண மாக ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கும் மீண்டும் நோய் தொற்று வதற்கான அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து பல நாடுகள் இப்போதுதான்  மீண்டு வருகின்றன. முடங்கிய பொருளாதாரமும் சற்று எழுந்து நிற்கத் தொடங்கியுள்ளது. நமது நாட்டில் பெருந்தொற் றால் இதுவரை 4லட்சத்து 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு பெருந்தொற்றை நம்மால் சமாளிக்கமுடியாது. எனவே, ஒன்றிய-மாநில அரசுகள் இந்த வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழையால் இருக்கத்  தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

புதிய வகை வைரஸில் பல பிறழ்வுகள் இருப்ப தால், அது வேகமாகப் பரவலாம் என்றும் தடுப்பூசிகள் அளிக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

எனவே, தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு உரிய பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.  உலக சுகாதார அமைப்பும் ஓமிக்ரான் குறித்து  மற்ற நாடுகளோடு அவ்வப் போது தகவல்களைப் பகிர்ந்து கொள்வதோடு அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கி ணைந்து மேற்கொள்ளவேண்டும். 

நாட்டில் சுகாதார கட்டமைப்பின் திறன் இது போன்ற பெருந்தொற்று ஏற்படும்போதுதான் வெளிச்சத்திற்கு வருகிறது. எனவே புதிய புதிய  வைரஸ் தொற்றுகளை உடனுக்குடன் கண்டறிய வும் அவற்றுக்கு எதிராகத் தடுப்பு நடவடிக்கை களைத் தீவிரப்படுத்தவும் தற்போதுள்ள ஆய்வகங்களின் திறன்  மேம்படுத்தப்படவேண்டும். டிசம்பர் 15 முதல், சர்வதேச விமான போக்குவரத்தில் உள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. நாட்டில்  இதுவரை 57 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில் இந்தமுடிவை ஒன்றிய அரசு தள்ளிவைக்கவேண்டும்.

;