மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் தக வல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நீட் தேர்வுக்கு முடிவு கட்டி மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்வதே பொருத்தமாக இருக்கும் என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வில் மோசடி என்பதாக தொடங்கிய விவாதம் இப்போது நீட் தேர்வு முறையே மோசடி யான ஒன்றுதான் என்பதில் வந்து நிற்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிற போது, சர்ச்சைகளும் கூடவே வெடிக்கும். தகுதி, தரம் என்று அதற்கு சப்பைக்கட்டு கட்டுவார்கள். ஆனால், தேசிய அளவிலான தேர்வை நேர்மையாகவோ, வெளிப்படையாகவோ நடத்தும் தகுதியோ, தரமோ ஒன்றிய அரசுக்கும், தேசிய தேர்வு முக மைக்கும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
நீட் தேர்வு மோசடியை எதிர்த்து உச்சநீதிமன் றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்வு மையங் கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் முடிவு களை வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஹரி யானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள ஒரு பள்ளி யில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப் பெண்கள் பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது வெளியிடப்பட்ட முடிவில் அந்த மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 13 பேர் மட்டுமே 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை.
இதேபோல, குஜராத் மாநிலம் ராஜ்கோட் நக ரில் நடந்த தேர்வில் 240க்கும் மேற்பட்ட மாண வர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேலும், 11 பேர் 700 மதிப்பெண்களுக்கு மேலும், ஒருவர் முழு மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். இந்த மையத்தில் அப்பட்டமான மோசடி அரங்கேறியுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் உள்ள தேர்வு மையத்தில் 15க்கும் மேற்பட்டோர் 600 மதிப்பெண் களுக்கு மேல் பெற்றுள்ளனர். இன்னொரு மையத்தில் 83 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். பீகாரில் வினாத்தாள் வெளி யான விவகாரம் ஏற்கெனவே புகைந்து கொண் டுள்ளது. நாடு முழுவதும் மோசடியான முறையி லேயே நீட் தேர்வு நடந்துள்ளது தெளிவாக அம்ப லமாகியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்வு எழுதி யவர்களின் புள்ளி விபரங்களிலும் குளறுபடி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு திங்க ளன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நீதி யை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். உயர் கல்வி உள்பட ஒட்டு மொத்த கல்வித் துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எதிர்கால இந்தியாவின் வேரில் வெந்நீர் ஊற்ற அனுமதிக்கக் கூடாது.