headlines

img

மீண்டும் ஒரு துரோகம்

துரோகம் செய்வது பாஜகவுக்கும் அதன் முன்னோடி அமைப்புகளுக்கும் கைவந்த கலை. சுதந்திரப் போராட்ட காலம் முதல் தற்போதைய கார்ப்பரேட், காவிமய காலம் வரை அது தொ டர்கிறது. திங்களன்று மக்களவையில் மின் விநியோ கத்தை தனியாரை அனுமதிக்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதாவை மோடி அரசு அறி முகம் செய்தது. இது விவசாயிகளுக்கு மோடி அரசு கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது. 

விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய உலகப் புகழ்பெற்ற தீரமிக்க போராட் டத்தின் விளைவாக ஏற்பட்ட எழுச்சியின் காரண மாக உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தோல்வி யை தவிர்ப்பதற்காக விவசாய விரோத சட்டங்கள் மூன்றுடன் மின்சார திருத்தச் சட்டத்தையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் தற்போது மீண்டும் மின்சார திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் அநீதியை இழைத்துள்ளது பாஜக ஒன்றிய அரசு.

இதனால் மசோதாவுக்கு நாடாளுமன்ற மக்க ளவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. மசோதாவை முற்றாக கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்தினர். இல்லாவிடில் விவசாயிகள், நெச வாளர்கள், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப் பட்டு வரும் இலவச மின்சாரம் ஒழிக்கப்படும் நிலை ஏற்படும் என்று கடும் ஆட்சேபணையைத் தெரி வித்தனர்.

இந்த மசோதா கொண்டு வருவதற்கு முன்பாக மின் உற்பத்தி, விநியோகத்தை மேற்கொண்டு வரும் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் கூட்டாட்சி முறையை குழிதோண்டி புதைத்ததற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். தொடர்ந்து மாநி லங்களின் உரிமைகளை பறிப்பதையே செய்து வரும் மோடி அரசின் இந்த நடவடிக்கை அதன் மற்றும் ஒரு அதிகார அத்துமீறலாகும்.

பொதுப் பட்டியலில் உள்ள பொருட்கள் குறித்து மாநில அரசுகளை கலந்தாலோசிக்காம லேயே மோடி அரசு கல்வி, கூட்டுறவு போன்ற பல துறைகளிலும் தன்னுடைய எதேச்சதிகார நடவ டிக்கையை விஸ்தரித்துக் கொண்டே வருகின்றது. இந்த அதிகாரக்குவிப்பு நடவடிக்கைகளை ஒன்றிய மோடி அரசு கைவிட வேண்டும். மாநில உரிமை களை மதிக்க வேண்டும். 

மக்களின் சேவகர், சவுகிதார் என்று பல்வேறு பட்டப் பெயர்களின் மூலம் தன்னை பிரபலப்படுத் திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி கார்ப்ப ரேட்டுகளின் காவிக் கூட்டத்தினரின் சேவகராக வும் சவுகிதாராகவுமே விளங்குகிறார். மின்சாரத் துறையை மாநிலத்தின் கட்டுப்பாட்டிலிருந்து ஒன்றிய அரசு கையகப்படுத்தும் அத்துமீறல் நடவ டிக்கையை முற்றாக கைவிட வேண்டும். தனியார் மின் விநியோகம் முற்றிலும் தோல்வியடைந்த நிலையை முன்பு மகாராஷ்டிர மாநிலத்தில் அந்நிய நிறுவனமான என்ரான் கம்பெனியின் பின்வாங்கலை ஏற்கெனவே நாட்டு மக்கள் அனுபவித்துள்ளனர். எனவே  மின் விநியோக தனியார்மய மசோதாவை கைவிடுதலே நாட்டு மக்களுக்குச் செய்யும் நன்மையாகும்.

;