headlines

img

ஜி.டி.பி மதிப்பீடுகள்; வெடிக்கும் பலூன்கள்

2022-23 முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பீடுகள் சென்ற ஆண்டின் முதல் காலாண்டை விட 13.5 சதவீத உயர்வு என அரசின் பிரதிநிதிகள் கொண்டாடுகிறார்கள். 

13.5 சதவீதம் என்ற புள்ளி விவரம் அப்படி  ஒரு மயக்கத்தைத் தரும் என்பது உண்மைதான்.  ஆனால் புள்ளி விவரங்களை மேலோட்டமாகத் கடந்து செல்லாமல் ஆய்ந்து பார்த்தால் “இன்னும் தேக்கம் என்ற பள்ளத்தில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீளவில்லை” என்பது  தெளிவாகும். 

ஆனால் இங்கு ஒப்பீடு 2022 - 23க்கும் 2021 - 22க்கும் இடையிலே இருக்க முடியாது. காரணம்  இரண்டுமே பேரிடருக்கு பிந்தைய காலங்கள். ஆகவே பொருளாதார தேக்கம் என்ற பள்ளத்தில் இருந்து மீட்சியா இல்லையா என்பதற்கு பேரிடருக்கு முந்தைய காலத்தை ஒப்பீடுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 

2019 - 20 நிதியாண்டின் முதல் காலாண்டை எடுத்துக் கொள்வோம். அப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ரூ 35.85 லட்சம் கோடிகள். இப்போது 2022 -23 இல் ரூ 36.85 லட்சம் கோடிகள். எவ்வளவு உயர்வு எனில் வெறும் 2.8 சதவீதமே. ஆகவே 13.5 சதவீதம் என்று அரசுப் பிரதிநிதிகள் பறக்க விடுகிற பலூன் படார் என்று வெடித்துச் சிதறுகிறது. 

இப்போது பேரிடர் பெருமளவு கட்டுப்பாட்டி ற்கு வந்துள்ளது. என்றாலும் மீட்சி போதுமான அளவில் இல்லை என்பதே உண்மை. 

2019 - 20 அளவையாவது கடந்து விட்டோமே  என்று சில அரசு பொருளாதார நிபுணர்கள் ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய அளவோடு ஓப்பிடு கிறோம் என்பதை மறக்கக் கூடாது. மக்கள் தொகை கூடி இருக்கிறது. மூலதனப் பெருக்கமும் அதிகரித்துள்ளது. ஆனால் தனி நபர் ஜி.டி.பி  சராசரி வீழ்ந்து இருக்கிறது.  

உண்மை என்ன என்றால், பேரிடருக்கு முன்பாகவே இந்தியப் பொருளாதாரம் சுகமாக இல்லை. இணை நோய்கள் இருந்தால் கோவிட்  பாதிப்புகள் அதிகமாக இருந்தது போலவே பொருளாதாரத்திலும் பேரிடர் பாதிப்பு இருந்துள்ளது.

ஆகவே கொண்டாடுவதற்கு ஏதுமில்லை. மாறாக நெருக்கடியின் தீவிரத்தையே  இவ்விவரங்கள் குறிக்கின்றன. இந்த நெருக்கடி நீடிப்பதற்கும் இந்தியப் பொருளாதாரத்தின் தேக்கம் தொடர்வதற்கும் அடிப்படையான காரணம் பெருவாரியான உழைக்கும் மக்களின் கைகளில் வாங்கும் சக்தி கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது என்பதே. நாளுக்கு  நாள் தீவிரமடையும் வருவாய் அசமத்துவத்தின் காரணமாகவே வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந் துள்ளது. பேரிடர் காலத்தில் இந்த வீழ்ச்சி  தீவிர நிலையை எட்டியது. மக்கள் கைகளில் கிடைக்கும் பணத்தின் உண்மை மதிப்பு கடுமை யாக வீழ்ந்துள்ளது. இவற்றை மீட்பதற்கு வக்கற்ற அரசாகவே மோடி அரசு உள்ளது.

;