headlines

img

விடுதலை வேள்வியில் ஆறுமுகநேரி -சுதேசி தோழன்

1942 ஆகஸ்ட் 7-8 தேதிகளில் பம்பாயில்  நடைபெற்ற அகில இந்திய காங்கி ரஸ் மகாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக இருந்தது. அதில்தான் “வெள்ளையனே வெளியேறு” தீர்மானம் நிறைவேறியது. மகாத்மா  காந்தி பேசும்போது இந்தப் போரில் ஒன்று செய்து  முடிப்போம் இல்லையேல் செத்து மடிவோம் என்ற  கோட்பாட்டை வலியுறுத்தி “செய் அல்லது செத்து  மடி” என்ற அறைகூவல் விடுத்தார். நேரு பேசும்  போது, பிரிட்டிஷ் அரசு சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு தானாக பெட்டி படுக்கைகளுடன் புறப் பட்டுப் போய்விடுவதுதான் புத்திசாலித்தனம். மக்களால் பிடரியைப் பிடித்துத் தள்ளும் நிலைமை  வராமல் அவர்களாகவே போய்விட இது அவர்க ளுக்குக் கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு என்று பேசினார்.  1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக் கத்தின்போது, தமிழகத்திலும் வீராவேசமிக்க போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக நமது தமிழ கத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதி யில் உள்ள ஆறுமுகநேரியில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. திருச்செந்தூர் வட்டாரத்தில் நாட்டை கொள்ளையடித்த ஆங்கிலேய வெள்ளை யனை, விரட்டியடிக்க சுதந்திரச் சேனை அமைக்கப்பட்டது. கே.டி.கோசல்ராம், பி.எஸ்.ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோர் இதில் முன்னணியில் நின்றனர். 1942 ஆகஸ்ட் 12ல் ஆறு முகநேரி சந்தை திடலில் 10000 பேர் கூடி உப்பளங்  களை நோக்கி அணி வகுத்துச் சென்றனர். 1000 பேர் கைது செய்யப்பட்டனர். 

செப்டம்பர் 9 நள்ளிரவில் மெஞ்ஞானபுரம் அஞ்சலகம் கைப்பற்றப்பட்டது. போராட்டக் காரர்களை கொள்ளையர்கள் என நினைத்து ஊர் மக்கள் சுற்றி வளைத்தனர். போராட்டக்காரர்கள் ஒரு கணம் திகைத்து நின்றனர். பின்னர் கைகளை  உயர்த்தி வந்தே மாதரம் என்று முழங்கினர். உடனே  ஊர் மக்களும் வந்தே மாதரம் என்று முழங்கி னர். இந்த சம்பவம் அந்த வட்டாரத்தில் பலஆண்டு களாக பேச்சுவழக்கில் பேசப்பட்டு வந்தது. சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு நள்ளிரவு நேரத்தில் பாடைகட்டி சவ ஊர்வலமாகச் சென்று ஆங்கிலேயர்களின் ஏவலர்களாக இருந்த போலீசாரின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு துப்பாக்கிகளை கைப்பற்றிச் சென்றது போன்ற பல சம்பவங்களும் நடந்தன.  செப்டம்பர் 29 அன்று குலசேகரன்பட்டினம் கிராமத்தில் போலீசாரோடு நடந்த மோதலில், உப்பளம் உள்ள பகுதியில் வேலை செய்யும்  உள்ளுர் மக்களை பாடாய்படுத்திய ‘‘லோன்துரை” என்ற  ஆங்கிலேய இன்ஸ்பெக்டர்  கொலை செய்யப்பட்டார். இதில் 61 பேர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 26 பேர் மீது ஒரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் 1943 பிப். 6 அன்று தீர்ப்பு சொல்லப்பட்டது.  ஆறுமுகநேரி காசிராஜன், ராஜகோபாலன் என விடுதலைப் போராளிகள் இருவருக்கு தூக்கு தண்டனையும் மூன்று ஆயுள் தண்டனையும் 14 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ஆக மொத்தம் 74 ஆண்டு சிறை தண்டனையும், ஏ.எஸ்.பெஞ்சமினுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்ட னையும் விதிக்கப்பட்டது. மேலும் பலருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் உடன்குடியைச் சேர்ந்த தோழர் எஸ்.பூவலிங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

காசிராஜனும் ராஜகோபாலனும் தண்டனை வழங்கிய நீதிபதியிடம் “எங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமா அல்லது  சிறைத் தண்டனையை அனுபவித்த பிறகு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா” என்று கேலியாக  கேட்டார்களாம். அதிலிருந்து ஆறுமுகநேரி ராஜ கோபாலன் தூக்குமேடை ராஜகோபாலன் என்று  அழைக்கப்பட்டார். அத்தகைய நெஞ்சுரம் படைத்த மகத்தான சுதந்திரப்போராட்ட வீரர்களை கொண்ட ஊர் ஆறுமுகநேரி. இப்படி ஆறுமுகநேரியில் மட்டுமல்ல... நாடு  முழுவதும் ஆவேசத்தையும் அதிர்வலைகளை யும் ஏற்படுத்திய மகத்தான ‘வெள்ளையனே வெளி யேறு போராட்டம்’ துவங்கிய நாள் ஆக. 9 1942. 15.8.2019-ல் 73வது சுதந்திர தினவிழாவை நாம்  கொண்டாடுகிறோம். நம் முன்னோர்களின் வர லாற்றை தெரிந்துகொண்டு அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தோடு வாழ்வது நம் உரிமை. அவர்களின் போராட்ட வாழ்க்கையை மறவா மல் போற்றுவது நம் கடமை. 100 வருடத்திற்கு  முந்தைய நம் முன்னோர்களின் சுதந்திரப்போராட்ட மும் வாழ்க்கை முறையும் நமக்கு வழிகாட்டி. அதைப்போலவே நாமும் தனிமனித ஒழுக்கத் தோடு வாழ்ந்து நமது அடுத்த தலைமுறைக்கு வழி காட்டியாக அமைய நம் பள்ளிப்பருவத்தில் நல்ல அறிவுரைகளைப் பின்பற்றி படித்து முன்னேறு வது அவசியம்.

;