headlines

img

தேர்தலுக்காக பொய்களை அவிழ்த்து விடுவதா?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று பேரவைக்குள் நுழைந்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிறது பாஜக. இதற்காக மக்களை ஏமாற்ற பிரதமரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும்  நாளுக்கு நாள் பொய் அவிழ்த்துவிடுகிறார்கள். 

கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து இயற்கை சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம். புயல் வெள்ளம் ஏற்படும் போதும்  இழப்புகளை ஈடுகட்ட அள்ளி அல்ல; கிள்ளிக்கூட கொடுக்காதவர்கள் தான் மத்திய  ஆட்சியாளர்கள்.இதுதான் உண்மை நிலை. ஆனால்  தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் ஏராளமான நிதியுதவியை மத்திய அரசு வழங்கியதாகவும்  ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும்  மோடியும் அமித்ஷாவும் தேர்தல் பிரச்சாரத்தில் நா கூசாமல் பொய்களை அள்ளி வீசிவருகிறார்கள்,

2019 மக்களவை தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காக   மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  ஆனால் அந்த திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. வெளிநாட்டில் கடன் கேட்டிருக்கிறோம் என்றுஇப்போது சொல்கிறார்கள்.  ரயில்வே திட்டங்களிலும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம். உரிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தால் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்த அமித்ஷாதமிழகத்தில் உள்ள அதிமுக அரசு நிர்வாகத்திலும், நீர் மேலாண்மையிலும் சிறப்பாகச் செயல்படுவதாகச் சான்று கொடுத்திருக்கிறார். இந்த அரசுநீர் மேலாண்மையில் எந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்பதற்குத் தேர்தல் அறிவிக்க இருந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி செய்த வேலையைப் பார்த்தலே தெரியும்.  காவிரி - சரபங்கா நீரேற்று திட்டம் என்ற பெயரில்  முதலமைச்சர் கடந்த மாதம் 26ஆம் தேதிஅவசர கதியில் சேலம் மாவட்டத்தில்  ஏரிகளுக்குத் தண்ணீரைத் திறந்துவிட்டார்.  120 கிலோமீட்டருக்கு கால்வாய் அமைக்கும் இத்திட்டத்தில்10 கிலோ மீட்டருக்கு கூட பணிகள் நிறைவடையவில்லை. மேட்டூர் அணையில் 120 அடி நீர் தேங்கிய பிறகு அதற்கு மேல் வரும் உபரிநீர்தான் இந்த திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 103 அடிதான். இந்த நிலையில், மேட்டூர்அணையிலிருந்து தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி இத்திட்டத்திற்கான கிணற்றுக்குள் விட்டுள்ளனர்.

தேர்தலுக்காக எடப்பாடி அரசு சேலம் மாவட்ட விவசாயிகளை ஏமாற்றியதோடு மேட்டூர்தண்ணீரை நம்பியுள்ள காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மாபெரும் துரோகத்தையும் செய்துள்ளது.  இப்படிப்பட்ட அதிமுக அரசுதான்  நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படுவதாக அமித்ஷா பாராட்டுகிறார். அதிமுக அரசின் நிர்வாகத்தைப் பற்றி சொல்லத் தேவையில்லை. அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நாற்றம். 10 ஆண்டுகால அதிமுக அரசின் மோசமான நிர்வாகத்தால் மாநிலத்தின் கடன் ரூ.5.70லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதைத்தான் சிறந்த நிர்வாகம் என்கிறாரா அமித்ஷா.

;