headlines

img

இரண்டாவது அலையும், முந்தைய அனுபவமும்...

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஞாயிறன்று ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 1501 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் தில்லி, மகாராஷ்டிரம், உ.பி., மற்றும் வட மாநிலங்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத், உ.பி.,மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன்கிடைக்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

பல மாநிலங்களில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் இல்லை.போதிய அளவு மருத்துவ மற்றும் மருத்துவப் பணியாளர்களும் இல்லாத நிலையும் உள்ளது. இதனால்நிலைமை மேலும் மேலும் மோசமாகி வருகிறது.ஆனால் இதுகுறித்து எந்த கவலையும் இல்லாமல் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாஆகியோர் மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில்முனைப்பு காட்டுகின்றனர். இது பொறுப்பின்மையின் உச்சமாகும். தடுப்பூசி திருவிழா என்று அறி
வித்த நிலையில், பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.மறுபுறத்தில் புலம் பெயர் தொழிலாளர் பிரச்சனை மீண்டும் உருவெடுத்துள்ளது. தமிழகம்உட்பட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஊர்திரும்ப துவங்கியுள்ளனர். கடந்த முறை புலம் பெயர் தொழிலாளர்பிரச்சனையை மிக மோசமாக கையாண்டு அவப்பெயர் தேடிக்கொண்டது மோடி அரசு. இப்போது என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் முழுஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக நீடித்த ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து  இந்தியப் பொருளாதாரம் இன்னமும் மீளவில்லை. இப்போது கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் வேளையில் பொருளாதார ரீதியாக இந்தியா மிகப் பெரும்சிக்கலை எதிர்கொள்ளும் என்றும் நிச்சயமற்ற நிலைஉருவாகும் என்றும் நிதிஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

நிதித்துறை சார்ந்து பல்வேறு முடிவுகளை அரசுஎடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் கடந்த முறை நிதிசார் நடவடிக்கை என்ற பெயரில் மோடி அரசு எடுத்த நடவடிக்கை அனைத்தும் கோடானுகோடி ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவுமே அமைந்தன. இந்த நெருக்கடியைபயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏராளமான சலுகைகள்அறிவிக்கப்பட்டன. இதனால் அவர்களுடைய சொத்து மதிப்பு பல மடங்குஉயர்ந்தது. மறுபுறத்தில் பெரும் பகுதி இந்தியமக்களின் வாழ்வாதாரம் அடியோடு நொறுங்கியது. இப்போது இரண்டாவது அலை பரவுவதையொட்டி ஊரடங்கு அறிவிப்பதோடு அரசுகளின் கடமை முடிந்துவிடாது. இந்த முறையாவதுபாதிக்கப்படும் மக்களுக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், விவசாயம், சேவைத்துறைக்குநிவாரணம் அளிப்பதாக அரசின் அறிவிப்புகள் இருக்க வேண்டும்.

;