headlines

img

அறநிலையத் துறை அமைச்சரின்  அறம் சார்ந்த அறிவிப்புகள்....  

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராகநியமிக்க நடவடிக்கை, இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யும் வசதியை விரும்பும்பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி, வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச ஆய்வு மையம் உள்ளிட்டஇந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.  சமூகநீதியை நிலைநாட்டும் பயணத்தில் இந்த அறிவிப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. 

கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அனைத்துசாதியினரையும் அர்ச்சகராக நியமித்தது பெரும் வரவேற்பை பெற்றது. தேவசம் போர்டு கட்டுப்பாட்டில்உள்ள கேரள கோயில்களில் ஆறு தலித்துகள் உள்பட 36 பேர் அர்ச்சர்களாக நியமிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்காலத்திலேயே இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. எனினும்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாகஇதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை அனுமதிக்கும் அரசாணை 2005 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டது. அனைத்து சாதிகளைச் சேர்ந்த 206 பேருக்குஅர்ச்சகருக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது. எனினும் திமுக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆதிசிவாச்சாரியர் சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியது.பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்; எனினும் ஆகம விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. 

2018 ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்றபிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர்ஐயப்பன் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். எனினும் அதிமுக ஆட்சியில் அந்த முயற்சிதொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை. இந்த பின்னணியில் பயிற்சி பெற்ற அனைத்துசாதியினரும் நூறு நாட்களுக்குள் அர்ச்சகர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளது மிகுந்த கவனம் பெறுகிறது.மேலும் விரும்பும் பெண்களுக்கும் அர்ச்சகர்பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளது கைதட்டி வரவேற்க வேண்டிய ஒன்றாகும். பெண்களை அர்ச்சகராக நியமிப்பதிலும் கூட கேரளம் முன்மாதிரியாக விளங்குகிறது.  2018ஆம் ஆண்டு 124 கோயில்களில் பல்வேறுசாதிகளைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டபோது 18 வயதான ஜியோச்சனாவும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பெருந்தெய்வ கோயில்களில் அனைத்து சாதியினரும், பெண்களும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு பணியாற்றும் போது ஆன்மீகத்துறையில் அது மிகப் பெரிய மாறுதலாகவும், ஆறுதலாகவும் இருக்கும். அதேபோல சனாதனத்தை எதிர்த்து குரல் கொடுத்த வள்ளலார் குறித்த சமூகசீர்திருத்த செம்மல்களின் நெறிகளை ஆய்வு செய்வதும், பரப்புவதும் தமிழகத்தின் முற்போக்கு மரபுக்கு வலு சேர்க்கும்.

;