headlines

img

ஆக்கப்பூர்வமான துவக்கம்....

தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்பதவியேற்ற கையோடு மக்களுக்கு அளித்த தேர்தல்வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும்வகையில் முதற்கட்டமாக இம்மாதமே ரூ. 2,000வழங்கப்படும் என்றஅறிவிப்பும் கடந்த அதிமுகஆட்சியில் உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலையைலிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து வெளியிட்ட அறிவிப்பும்பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.  

நகரங்களில் இயக்கப்படும் சாதாரண கட்டணபேருந்துகளில் பணிபுரியும் மகளிரும், உயர் கல்விபயிலும் மாணவியர் உள்பட அனைத்து மகளிரும்கட்டணமில்லாமல் சனிக்கிழமை  முதல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பும் மக்களிடம் இந்த அரசுமீதான நம்பிக்கையைக் கூடுதலாக்கியுள்ளது.  இதனால் ஏற்படும் கூடுதல் தொகையான 1,200கோடி ரூபாயை மானியமாக அரசே ஈடுகட்டமுன்வந்திருப்பது நல்ல அணுகுமுறை.மாவட்டந்தோறும் மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தீர்வு காணப்படும் என்றவாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கென தனிக் கல்விக் கொள்கையை உரு
வாக்குதல், மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாகத்தமிழை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழை அலுவலக மொழியாக்குதல், தமிழை உயர்நீதிமன்ற மொழியாக அங்கீகரித்தல், வெளிப்படையான நிர்வாகம், சேவை உரிமைச் சட்டம், வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட  திமுகவின் இதர வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை புதிய அரசு விதைத்துள்ளது.விவசாயிகள் கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு கால மகப்பேறு விடுப்பு, முதியோர் உதவித் தொகை உயர்வு, கல்விக் கடன்தள்ளுபடி,கரம்பை மண் எடுக்க அனுமதி, ஆட்டோ வாங்க மானியம், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என்ற நம்பிக்கை தமிழக  மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்க்கப்படாத நெடுநாள் கோரிக்கைகள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதோடு ஆட்சி முடியும் நேரத்தில் அதிமுகஅரசு அறிவித்த காவிரி- குண்டாறு நதிகள் இணைப்புத்திட்டத்தையும் ஏற்கனவே கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது துவங்கப்பட்டு அதிமுக ஆட்சியில் போதிய நிதி ஒதுக்காமல் தாமதமாக நடைபெற்ற தாமிரபரணி-கருமேனியாறு  இணைப்புத் திட்டத்தையும் விரைந்து நிறைவேற்றதிமுக அரசு  நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடத் தொலைநோக்கு பார்வையோடு புதியதொழிற்கொள்கையை வகுத்தல்,  பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைத்தல் ஆகிய நடவடிக்கைகள் வாயிலாகக் கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு துறைகளில் பின்தங்கிய தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்குத் திருப்புவதே  முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். 

;