headlines

img

எச்சரிக்கை

இந்திய விவசாயத்தை விவசாயிகளிடமிருந்து பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற்றி விடுவதை நோக்கமாக கொண்ட வேளாண் திருத்தச் சட்டங்களை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை தடுக்க வேண்டும். தேசத்தின் சொத்துக் களான பொதுத்துறை நிறுவனங்களை முற்றாக தனியாருக்கு தரும் தேச விரோத போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டமும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில், சாலை மறியல் போராட்டங்களும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன.

இந்த போராட்டம் ஒன்றிய பாஜக கூட்டணி அர சுக்கு இந்திய மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கையா கும். விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்த இந்தப் போராட்டத்திற்கு இடதுசாரி கட்சி கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், பல்வேறு தொழிற்சங்கங்களும், வணிகர் அமைப்புகளும், வாலிபர், மாணவர், மாதர் என பல்வேறு வெகு மக்கள் அமைப்புகளும் பேராதரவு அளித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யும்  வரை ஓயமாட்டோம் என சூளுரைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைநகர் தில்லியிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் நீண்ட நெடிய போராட்டங்கள் உலக வரலாற்றில் இடம் பெறத்தக்க ஒன்றாக மாறி யுள்ளன. 

அமெரிக்கா சென்று இடைவிடாது பல்வேறு கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றதாக அவரது ஆதரவு ஊடகங்கள் படம் காட்டுகின்றன. ஆனால் பல மாத காலமாக போராடி வரும் விவசாயிகள் அமைப்பின் தலைவர்களை நேரில் அழைத்து பேசுவதற்கு கூட மனமற்றவராக பிரதமர் மோடி இருக்கிறார். மறுபுறத்தில் ‘மனதின் குரல்’ என வெற்று வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கொண்டி ருக்கிறார் நாட்டின் பிரதமர்.

தேசிய பணமயமாக்கல் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்களை குறிப்பாக பொதுத்துறை நிறுவ னங்களை ஒட்டு மொத்தமாக தனியாருக்கு விற்று முடித்துவிடுவதில்தான் மோடி அரசு முனைப்பாக உள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள் ளது. ஆனால் நாங்கள் எதையும் விற்கவில்லை. ஒத்திக்குத்தான் விடுகிறோம் என்று ஒன்றிய அமைச்சர்கள் மாய்மாலம் செய்கின்றனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அன்றாடம் உயர்த்தப்பட்டுக் கொண்டே இருக்கி றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எரிவாயு விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் வாழ்க்கை செலவுகளை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். குறிப்பாக சமையல் எரிவாயு விலை உயர்வு பல குடும்பங்களின் பட்ஜெட்டை படுகுழியில் தள்ளி யுள்ளது.

இந்த நாட்டை ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது என வீதிக்கு வந்து ஆவேசமாக அனைத்துத் தரப்பு மக்களும் போராடுகின்றனர். அதன் ஒரு பகுதியே இன்றைய மகத்தான போராட்டம். இது ஒன்றிய அரசுக்கு மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை.

;