headlines

சமூகப்பிணி அகற்றும் மருந்து - சமூகநீதி - சு.மூர்த்தி ,ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு

2021 ஆம் ஆண்டின் பெரியாரின் பிறந்த நாள் மேலும் பெருமைக்குரிய நாளாக மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  கடந்த 6-ஆம் தேதி யன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்  பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் நாள் சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித் தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள அனைத் துக் கட்சிகளும் இதை வரவேற்றன. பெரியா ரின் கொள்கைகளை விமர்சிக்கும் கட்சிகள் கூட பெரியார் சமூக நீதியின் குறியீடாக இருப்ப தை ஏற்றுக்கொண்டதையே இது காட்டுகிறது.  இதனைத் தொடர்ந்து  அன்றைய  நாளில் அரசு அலுவலகங்களில்  பின்வரும் சமூகநீதி உறுதிமொழி ஏற்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பும் வந்தது.  ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவ ரும் கேளீர் என்ற பண்பு நெறியும் எனது  வாழ்வியல் வழிமுறையாகக்  கடைப்பிடிப் பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும் -பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்ட தாக எனது செயல்பாடுகள் அமையும். சமத்து வம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்ப டைத்துக் கொள்வேன்.மானுடப் பற்றும் மனிதா பிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூகநீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கி றேன்.’’

சமூக நீதியின் பொருளை உணரும் வகை யில் உறுதிமொழியை உருவாக்கியதைப் பாராட்டியே ஆகவேண்டும்.  தமிழ் மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூகப் பிணிகளை அகற்றும் சமூக மருந்தாக சமூக நீதி பேசப்பட்டதையும் உறுதிமொழி பறைசாற்றுகிறது.  தற்போதைய சூழலில் இந்திய ஒன்றிய அரசின் போக்கு, மாநில அரசுகளின் உரிமைகளைக் காவு வாங்கி வருவதையும் தமிழக மக்கள் தடுத்தாக வேண்டியுள்ளது. இந்திய ஒன்றியத்தின் அரசி யல் அமைப்புச் சட்டத்தால் வடிவமைக்கப் பட்டுள்ள கூட்டாட்சி அரசியல் நெறிகளையும் சமூக, அரசியல், பொருளாதார நீதிகளையும் சமயசார்பற்ற கலாச்சாரத்தையும்  சமத்துவ வாழ்வியலையும் காப்பதற்கும் வளர்ப்பதற்கும் சேர்த்தே பெரியாரின் பிறந்த நாளில் இந்திய ஒன்றிய மக்கள் அனைவருமே உறுதி ஏற்க வேண்டியுள்ளது.   சமூக நீதி உறுதி மொழியை ஏற்பதோடு, சமூக நீதியின் வரலாற்றைத் தேடி அறிய வேண்டியதும் அவசியமானது. காலச் சக்க ரத்தை முன்னோக்கிச் சுழற்றிய கொள்கைகள் அனைத்தும் சமூக நீதிக் கொள்கைகளே. சமூக நீதியின் வரலாறு என்பது விரிவானது. சமூகநீதிக் கொள்கைகள் காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் மாறிக்கொண்டு வருவ தும் சமூகத்தின் வரலாற்று விதி. காலத்தின் தேவைக் கேற்ப, மக்களின் வாழ்க்கை  நிலை களுக்கு ஏற்ப சமூக நீதிப் போராளிகளையும் சமூகம் பெற்றெடுத்துக் கொடுத்தே தீரும்.  அம்பேத்கர், பெரியார் போன்றோரையும் இன்னும் பல சமூகநீதிப் போராளிகளையும் இந்திய சாதிய சமூக அமைப்பு பெற்றெடுத்துக் கொடுத்ததில் வியப்பில்லை. சமூக நீதி குறித் தான உலகளாவிய பார்வையும் இன்றைய உலகமயச் சூழலில் அவசியமானது.

மேற்குலகில் தொழிற்புரட்சி ஏற்பட்டதன் விளைவாக முதலாளித்துவச் சுரண்டல் கொடு மைகள் நடந்தன. தொழிலாளர்கள் மனிதர்க ளாகக் கருதப்படாமல் உழைக்கும் விலங்கு களாகப் பயன்படுத்தப்பட்டனர். இதற்கு எதிராக உழைப்பாளர்களுக்கான சமூக நீதிக்  கொள்கைகள் உயிர்பெற்றன. உழைப்பாளர்க ளின் உரிமைகளையும் வாழ்க்கை நலன்க ளையும் பேணும் பொதுவுடமைத் தத்துவம் எழுதப்பட்டது. உரிமைகளைக் காக்க உழைப் பாளர்களின் முன்னோடிகள் இரத்தம் சிந்தினர். முதலாளித்துவக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட செங்கொடிக் கட்சியும் உருவானது. இருபதாம் நூற்றாண்டில் சில நாடுகளில் தொழிலாளர் அரசியல் அதிகாரம் நிறுவப்பட்டது. இதில் சற்று பின்னடைவுகள் நடந்துள்ளன. ஆனாலும் முதலாளித்துவக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் சமூக நீதிக்கான மீட்டுருவாக்கம் உலகின் மூலை முடுக்கெல்லாம் நடந்து கொண்டே உள்ளது. 26 நவம்பர் 2007 அன்று,

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையின் 63 ஆவது அமர்வில் பிப்ரவரி 20 ஆம் நாள் ஆண்டுதோ றும் உலக சமூக நீதி நாளாகப் பின்பற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 21 ஆம் நூற்றாண்டில் சமூக நீதியின் குரல் உலகம் முழுவதும் எதிரொலிப்பதே இதற்குக் காரணம்.   இன்று முதலாளித்துவ உலகமயமாக்கல் தவிர்க்க முடியாத பொருளாதார முறைமை யாக வளர்ந்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு 10 ஜூன் 2008 அன்று,  நியாயமான உலகமயமாக்கலுக்கான சமூக நீதி  குறித்த பிரகடனத்தை அறிவிப்பு செய்துள்ளது.  உலகம் முழுமையுமான சமூக வளர்ச்சியும்  சமூக நீதியும் நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கு வெளியிலும் அமைதி மற்றும்  பாதுகாப்பை உறுதி செய்ய அவசியமானது  என்பதை இவ்வறிவிப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அமைதி  மற்றும் பாதுகாப்பு  இல்லாத நிலையிலோ  மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கு மரி யாதை இல்லாத நிலையிலோ சமூக மேம்பாடு மற்றும் சமூக நீதியை அடைய முடியாது என்பதையும் உலகத் தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டுச் சமூக நீதி நாளில் இதை வரலாறு இட்ட கட்டளையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

;