headlines

img

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பண விநியோகம்....

தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற இரு வாரங்களே உள்ள  நிலையில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. திமுக அணியினர் மத்திய மாநில ஆட்சியாளர்களின் தோல்விகளைப் பட்டியலிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் உள்ளஅதிமுக அரசின் ஊழல்களையும் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தி வருகிறார்கள். இதனால்அதிமுக- பாஜக கூட்டணி கலக்கமடைந்துள்ளது.  தோல்வி நிச்சயம் என்று அவர்களுக்கு உளவுத்துறை  அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில்தற்போதைய களநிலவரம் படுதோல்வியை நோக்கிஅதிமுக கூட்டணி சென்று கொண்டிருக்கிறது என்பது தான்.  இதனால்  வாக்காளர்களை  வளைக்கநூதனமான முறையைக் கையாள ஆளும் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். 

மோடி அரசின் டிஜிட்டல் தொழில்நுட்பம் மக்களுக்கு பயன்பட்டதோ இல்லையோ ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளுக்கு நன்றாகப் பயன்படுகிறது. அதிமுக அமைச்சர்களில் பெரும் ஊழல்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள உள்ளாட்சித்துறை அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட தனியார் பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமாகப் பண விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக  திமுக  தலைமையிலான அணி குற்றம்சாட்டியுள்ளது. 

அதிமுக வேட்பாளர் வரும் போது வரிசையாகப் பெண்களை ஆரத்தி எடுக்கவைத்து தட்டுக்கு  500 போடுவது பகிரங்கமாகப் பல இடங்களில் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இதைத்தடுத்து நிறுத்தவேண்டிய தேர்தல் ஆணையம் சிறுதொழில் முனைவோரும், உற்பத்தியாளர்களும்  எடுத்துச்செல்லும் பணத்தைப் பறிமுதல் செய்வதுவேடிக்கையாக உள்ளது. கடந்த காலங்களில் பிடிபட்ட பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை ஆணையம் தான் விளக்கவேண்டும்.
ஆர்கே.நகரில் டி.டி.வி. தினகரன் 2017 இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டபோது அந்த தொகுதி வாக்காளர்களுக்கு 80 கோடிரூபாய்க்கும் மேல் பணம் விநியோகம் செய்யப்பட்டது.  தெருபெயர், வட்டத்தின் பெயர், கதவு எண்?

வாக்காளர் பெயர் என அனைத்து விவரங்களைப் பட்டியலிட்டு பணம் விநியோகம் செய்த அனுபவம்வாய்ந்தவர்கள் அதிமுகவினர்.  இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் உரிய ஆதாரங்களைக் கைப்பற்றிய பின்னரும் தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் உரிய முறையில் வழக்கை நடத்தவில்லை. அந்த வழக்கு நேர்மையான முறையில்நடந்திருந்தால் இன்றைய தினம் விஜயபாஸ்கர்சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பார்.தேர்தல் ஆணையத்தின் கடந்த கால வரலாறுஇப்படி உள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவைத்தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியினரின்பண விநியோகத்தை அது தடுக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். எனவே அதிமுக-பாஜக கூட்டணிக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வாக்காளர்களிடம் இருக்கும் ஒரே வலுவான ஆயுதம் வாக்குதான். அதன்மூலமேவாக்காளர்கள் இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

;