headlines

img

தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கு இங்கே வேலையில்லையா?

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அரசுப்பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய நடத்தும் தேர்வுகளில் கேட்கப்படும் வினாத்தாள்களில் பிழைகள், தவறான கேள்விகள், முறைகேடான நியமனங்கள் ஆகியவற்றால்  அடிக்கடிசர்ச்சையில் சிக்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர்மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் முதல் 100இடங்களுக்குள் இடம் பெற்றவர்களில் 40 பேர்ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வுஎழுதியவர்கள். இந்த முறைகேடு தொடர்பான விசாரணை இன்னும் முடியவில்லை. 

தமிழ்வழி பயின்ற மாணவர்களுக்கு தொல்லியல் அலுவலர் பதவித் தேர்வில் இழைக்கப்பட்டுள்ள அநீதிதான் புதிய சர்ச்சை. இந்தத் தேர்வில்தமிழை முதன்மைப் பாடமாகக் கொண்டு பயின்றவர்களுக்கு வேலையில்லை என்று அ.தி.மு.க அரசு கதவைச் சாத்திவிட்டது.  18 தொல்லியல் அலுவலர் பதவிக்கு எம்.ஏ., தமிழ், எம்.ஏ., வரலாறு ஆகியபாடங்கள் தான்  கல்வித்தகுதி.  இத்துடன் தமிழ்நாடுஅரசு தொல்லியல் துறையால் வழங்கப்பட்ட கல்வெட்டியல்-தொல்லியல் முதுநிலைப் பட்டயம் ஆகியவை கூடுதல் தகுதிகளாகும்.  இந்த அனைத்து தகுதிகள் இருந்தும், நடந்து முடிந்துள்ள தேர்வில்,தமிழகத்தைச் சேர்ந்த  நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். 

பிற மாநிலங்களில் பயின்ற தொல்லியல்துறைமாணவ, மாணவிகளைக் கலந்தாய்வுக்கு அழைத்துள்ளஅரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பயின்ற மாணவ - மாணவியரை நிராகரித்ததற்கான காரணத்தை விளக்கவேண்டும். பிற மாநில மாணவர்களை அழைத்ததோடு மட்டுமின்றி, இதர பிரிவினர்(Other Category) என்ற பிரிவிலிருந்து இரு மாணவர்களை இந்தக் கலந்தாய்வுக்கு அழைத்ததன் மர்மம்என்ன?

தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளில் நான்கில்மூன்று பங்கு தமிழில்தான் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது தமிழ் படித்த மாணவ - மாணவியருக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பது நியாயமற்றது. முதலில்விண்ணப்பத்திலேயே குளறுபடி தொடங்கிவிட்டது.  தமிழ் மொழி பயின்றதற்கான முன்னுரிமைஇட ஒதுக்கீடு கோருபவரா என்ற பிரிவைக் கூட அதில் தேர்வாணையம் சேர்க்கவில்லை.  இப்படி ஒரு விண்ணப்பப் படிவம் வெளியாவதையும் தமிழ்மொழியில் படித்தவர்களைப் புறக்கணிப்பதையும் அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

இந்தத்  தேர்வில் நிராகரிக்கப்பட்ட மாணவ - மாணவியர் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றவர்களாவர். தமிழக தொல்லியல் நிறுவனத்தில் படித்த மாணவ- மாணவியர்கள் தான் இன்று மிகப்பெரிய ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் இந்தத்தேர்வில் பங்கேற்றவர்களில், நிராகரிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பங்கு மாணவ மாணவியர் தமிழ்த் துறையினைச் சேர்ந்தவர்களாவர்.  அவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். எனவேதற்போதைய தேர்வு முறையை ரத்து செய்து தமிழகமாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையிலும் தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமைவழங்கும் வகையிலும் புதிதாக நியாயமான முறையில் தேர்வை நடத்தவேண்டும்.

;