headlines

img

மூச்சுத் திணறும் காற்று!

உலகளவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோயால்  ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. சமீபகாலமாகக் காற்று மாசுபாடு உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பதையே இந்தப்புள்ளி விபரம் காட்டு கிறது. இது மனிதர்களுக்கு இயற்கை விடுக்கும்  மிகப்பெரிய எச்சரிக்கையாகும்.

காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான  விட்டம் கொண்ட நுண்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது (ஒரு மனித முடியை விட 100 மடங்கு மெலிதாக இருக் கும்). தற்போது இதையும் உலக சுகாதார அமைப்பு திருத்தியிருக்கிறது.  அதன்படி பி.எம். 2.5 நிலைக்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பை ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராமிலிருந்து 5 மைக்ரோ கிராமாகவும்; பி.எம். 10 த்திற்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பை, 20 மைக்ரோ கிராமி லிருந்து 15 மைக்ரோ கிராமாகவும் குறைத்தி ருக்கிறது.

நமது வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 விழுக்காடு, ஆக்சிஜன்  21 விழுக்காடும், கரியமில வாயு 0.03 விழுக்காடு,  ஆரகன் 0.90 விழுக்காடு, மற்ற வாயுக்கள் 0.17 விழுக்காடு என்ற அளவில் இருக்கிறது.  இவை அனைத்தும் சமநிலையில் இருக்கும் வரை எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இந்த சமநிலை மாறும் போது அதற்கேற்ப விளை வுகள் ஏற்படுகின்றன. தற்போது  பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடு, காடு அழிப்பு உள்ளிட்ட நடவடிக்கை களால் காற்று மாசுபட்டு வளி மண்டலத்தில் உள்ள வாயுக்களின் விகிதம் மாறிவருகிறது.

இந்த மாற்றம் வெப்பமயமாதல்,  பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உரு வாக்குகிறது. குறிப்பாகக் காற்று மாசுபாடு நேரடியாக மனித உயிர்களை உறிஞ்சுகிறது. காற்றில் சிலிகான் அளவு அதிகரிக்கும்போது மனிதர்களுக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்படுகிறது. மாங்கனீஸ் அளவு அதிகரிக்கும்போது, நரம்பியல் பிரச்சனை அதிகரிக்கிறது. மாங்கனீஸ் மிக அதி கமாக வெளியாகும்போது, மூளைச் சிதைவிற்குக் கொண்டு செல்கிறது. நிக்கல் அதிகரிக்கும்போது மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு விரைவில் உயிரிழக்க வழிகோலு கிறது. இப்படி காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்பின் பட்டியல் நீள்கிறது.

காற்று மாசுபாடு காலநிலையையும் மாற்று கிறது என ஆய்வில் தெரியவந்திருக்கிறது.  தென் மேற்கு பருவமழையை 10 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடு வரை குறைத்திருக்கிறது.  சில இடங்களில் 50 விழுக்காடு வரை குறைந்திருக்கி றது. பருவ காலங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. காற்று மாசுபாடு  நம் தலைமுறையை மட்டும் அல்ல எதிர்வரும் தலைமுறையையும் சேர்த்தே பாதிக்கிறது.  ஏற்கனவே இந்தியா நீர்ப் பற்றாக்குறை அதிகமாக உள்ள 17 நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. கார்பன் உமிழ்வில் 3ஆவது  பெரிய நாடாகவும், பருவநிலை அபாய குறியீட்டில் 7ஆவது இடத்திலும் இருக்கிறது என்பது கவ னிக்கத்தக்கது. 

எனவே தற்போது உலக சுகாதார அமைப்பு  வெளியிட்டிருக்கும் திருத்திய வழிகாட்டுதல் நெறி முறைகளை இந்தியா கடைப்பிடிக்க முன்முயற்சி எடுக்க வேண்டும். அதன் மூலமே இந்தியாவை மட்டுமின்றி உலகத்தையும் பாதுகாக்க முடியும்.

;