headlines

img

ஆர்எஸ்எஸ் பாடும் அபஸ்வரம்

ஆர்எஸ்எஸ் அமைப்பு துவக்கப்பட்ட விஜயதசமி நாளில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நீண்ட நெடிய உரையாற்றியுள்ளார். இந்திய திருநாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகின்றன என்று தன்னுடைய உரையை துவக்கி விடுதலைக்காக போராடியவர்களின் தியாகத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். ஆனால் அந்த விடுதலை போராட்டத்தில் தங்கள் அமைப்பின் பங்களிப்பு என்ன என்று அவர் எதுவும் கூற வில்லை. விடுதலைப் போராட்டக் காலத்தில் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் குறுக்குச்சால் ஓட்டியவர்கள் இந்துத்துவா அமைப் பினர். அதை கூறுவது பொருத்தமாக இருக்காது என்று மோகன் பகவத் கருதியிருக்கக்கூடும்.

சமூகத்தில் சாதி உணர்வு இன்னமும் நிலவி வருகிறது. இதை குறைக்க ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்த வேண்டும் என்று கூறிக் கொண்டே, உலகிற்கே வழிகாட்டக்கூடிய சனாதன தர்மத்தை பின்பற்றி வாழ வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். சாதியத்தின் வேர் சனாத னத்தில்தான் இருக்கிறது என்பது அவருக்கு தெரியும். ஆயினும் சனாதனத்தின் புகழ் பாடுவதன் மூலம் சாதியம் நிலைத்திருக்க வேண்டும் என்ற விருப்பத்தை அவர் வெளியிடுகிறார்.

மக்கள் தொகை அதிகரிப்பில் சமமற்ற தன்மை  நிலவி வருவதாகவும், இது மிகப் பெரிய சவால் என்றும் அவர் கூறியுள்ளார். இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், மறு புறத்தில் சிறுபான்மையோர் மக்கள் தொகை அதி கரித்து வருவதாகவும் எனவே மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து ஒரு மறுபரிசீலனை வேண்டு மென்றும் கூறியிருக்கிறார் மோகன் பகவத்.

இந்தக் கட்டுக்கதையை ஆர்எஸ்எஸ் அமைப்பு அடிக்கடி கூறி வருகிறது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறும் தரவுகள் இதை மெய்ப்பிப்பதாக இல்லை. மாறாக சிறுபான்மை யோர் மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வரு கிறது என்றும், பெரும்பான்மை மதத்தை பின்பற்று வோர் மக்கள்தொகையில் சரிவு எதுவும் இல்லை என்றும், அறிவியல்பூர்வமாக நிறுவிய பிறகும் வழக்கம் போல பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி சிறுபான்மையோருக்கு எதிரான அச்சுறுத்தலை நியாயப்படுத்த முயன்றிருக்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர்.

இந்து ஆலயங்கள் இந்துக்களிடம்தான் இருக்க வேண்டும் என்றும், தென்னிந்தியாவில் இந்த நிலைமை இல்லையென்றும் வருத்தப் பட்டுள்ளார் மோகன் பகவத். இவரது குரலைத்தான் எச்.ராஜா துவங்கி அண்ணாமலை வரை தமிழகத்தில் எதிரொலித்து வருகின்றனர். 

அரசின் பொறுப்பில் ஆலயங்கள் இருப்ப தால்தான் இந்தளவுக்காவது பாதுகாக்கப் பட்டுள்ளன என்பதை திட்டமிட்டு மறைத்து ஆல யங்களையும் பக்தர்கள் என்ற போர்வையில் தனியார்மயமாக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது. இது ஆபத்தானது. பக்தர்கள் இதை அனுமதிக்கக் கூடாது.

வழிபாட்டு உரிமை மாறுபட்டாலும் ஒரே நாகரி கம், ஒரே கலாச்சாரத்தை கொண்டவர்கள் என்று கூறுவதன் மூலம் ஒற்றைக் கலாச்சாரத்தை, ஒற்றை தேசியத்தை திணிக்க முயல்கிறார் பகவத். ஒரே ராகம் இசைக்க வேண்டும் என்று தன் உரையை முடித்திருக்கிறார் அவர். ஆனால் இவர்கள் பாடுவது அத்தனையும் அபஸ்வரம் என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

;