headlines

img

நீதிக்கு தலைகுனிவு... (மகாராஷ்டிரா சிறுமி பாலியல் வழக்கு)

16 வயது சிறுமியை பல முறை பாலில் வல்லுறவுசெய்த குற்றவாளியை பார்த்து, ‘நீயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று  ஒருவர் கூறியிருக்கிறார். இது ஏதோ கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் கூறிய  வார்த்தைகள் அல்ல. இந்திய மக்க
ளின் உரிமைகளை உறுதிப்படுத்தும் உட்சபட்ச  நீதிமன்றத்தின், தலைமை நீதிபதியின்  வார்த்தைகள். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்தின் மாண்புகளுக்கும் உலக அரங்கில் இதைவிட தலைக்குனிவை ஏற்படுத்த முடியுமா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பெண்கள் குறித்த பார்வை எப்படியிருக்கிறது  என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

இது ஏதோ இந்த ஒரு விஷயத்தில் இருந்து மட்டும்வருவதல்ல. தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கூறி வரும் கருத்துகள் பெண்அடிமைத்தனத்தை வழிமொழிவதாகவே இருக்கிறது.ஏற்கனவே,வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் பெண்களை ஏன் வைத்திருக்கிறீர்கள். அவர்களை வீட்டிற்குதிரும்ப அனுப்புங்கள் என கூறினார். பெண்களுக்குபோராட்ட உணர்வு கூடாதா? அல்லது பெண்கள்உரிமைக்காக போராடவே கூடாது என்று அர்த்தமா? இதில் பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்ற மனுவாதிகளின் உள்ளடக்கத்தை உறுதிப்படுத்தும் செயல் அல்லவா?

இதே நீதிபதி பாப்டே மற்றொரு வழக்கில், திருமணமான பின்னர் கணவன் மிருகத்தனமாக  கட்டாய வல்லுறவில் ஈடுபட்டாலும் அதனை பாலியல் பலாத்காரம் என்று அழைக்க முடியுமா? என கேள்வியெழுப்பியிருக்கிறார். இது திருமணம் என்பதே கட்டாய வல்லுறவிற்கான உரிமம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது போல் இருக்கிறது. இந்த கேள்வி  வல்லுறவை நியாயப்படுத்துவது மட்டுமின்றி, சட்டப்பூர்வமாக மாற்றும் நோக்கமும் கொண்டதாக இருக்கிறது.  பெண்கள் ஒன்றும் உணர்ச்சிகளற்ற எந்திரங்கள் அல்ல.

மகாராஷ்டிரா சிறுமி பாலியல் வழக்கில்,  மோகித் சுபாஷ் சவான் என்பவன் பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி, தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதால்  மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அப்போது காப்பாற்றிய தாயிடம் கதறி அழுதபோதுதான் இந்த கொடூரமே வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம்  ஜாமீன் கொடுத்தது  ‘’அநியாயம்’’ என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வெளியிட்ட கருத்துகள்தான் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதிபதியின் உத்தரவுப்படி எந்த   சட்டத்தில் இந்த தண்டனை இருக்கிறது. அதே குற்றவாளி மீண்டும் பல பெண்களிடம் வல்லுறவு கொண்டால்என்ன தண்டனை  கொடுப்பீர்கள்?   நீதிபதிகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்ப
ளிக்க வேண்டும். அதனை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தலைமை நீதிபதி வெளியிட்ட கருத்துகளை திரும்பப்பெற வேண்டும். நீதிமன்ற குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். அதுவே நீதிக்கு செய்யும் நீதியாகும்.

;