headlines

img

அவர்களுக்காகத் தானே நரேந்திரர்களே....

பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட புதிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டுமென்று 45 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தில்லியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் இந்த சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா? என்று கேட்ட போது மத்திய அரசு வழக்கறிஞர் இயலாது என்று கைவிரித்து விட்டார். ஆயினும் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றமும் தனது தொடர்ந்த விசாரணையின்போது ஜனவரி 12 அன்று வேளாண் சட்டங்கள் மூன்றையும்  அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை விவசாயத்தை பாதுகாக்க விரும்பும் அனைவரும் வரவேற்கவும் பாராட்டவும் செய்கின்றனர். ஆனால் ஆட்சியாளர்களுக்கு தான் இதுவேம்பாக கசக்கச் செய்யும். உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது ரிலையன்ஸ் நிறுவனம் இது வரைஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடவில்லை என்றும் இனியும் விவசாயத்தில் இறங்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறியிருந்தது. அத்துடன் எங்கள்நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை கொள்முதல் செய்யப் போவதில்லை என்றும் அதன் தலைமை  நிர்வாக அதிகாரிகூறியிருந்தார். 

ஆனால் தற்போது கர்நாடக மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட கூடுதல்விலைக்கு ஆயிரம் குவிண்டால் நெல் கொள்முதல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகாவில் ஸ்வஸ்திய விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் என்றஏஜெண்ட் மூலமாக இந்த கொள்முதல் நடைபெற்றுள்ளது. ரூ.82 கூடுதலாக தந்து நெல்லை கொள்முதல்செய்ய அவர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை பேக்கிங்செய்வது, கொண்டு சேர்ப்பது ஆகிய செலவை விவசாயிகளே ஏற்க வேண்டும் என்பதும் கிடங்கில் உள்ள நெல்லை மூன்றாம் தரப்பு பிரதிநிதிகள் பரிசோதித்து ரிலையன்ஸ் வகுத்துள்ள விதிகளுக்கு உட்பட்டதாய் இருப்பின் அது ஏற்கப்படும் என்றும் ஸ்வஸ்திய விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மல்லிகார்ஜூன் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆட்கள் நிர்ணயிப்பதுதான் விலை என்பது உறுதியாகிறது. ஆனால் இவர்கள் கூடுதலாக விலைகொடுத்து வாங்கியுள்ளதாக கூறுவது ஏமாற்றுக்குரியதாகும். ஏனெனில் பேக்கிங் மற்றும் போக்குவரத்து செலவு, கூட்டமைப்பின் கமிஷன் போனால்மிஞ்சுவது என்னவாக இருக்கும்? அது அரசின் குறைந்தபட்ச விலையை விட குறைவாகும் சாத்தியமும் உண்டு. ஏற்கெனவே பஞ்சாப்பில் உருளைக்கிழங்கு விவசாயிகள் பெப்சிகோ கம்பெனியால் பட்டபாடு நாடறிந்தது. ஆனால் ஆட்சியாளர்களோ கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதாயத்தையே நினைக்கின்றனர். அவர்களது நலனை முன்னிறுத்துவதாலேயே விவசாயிகளை கைவிட்டு விட்டனர்.

;