headlines

img

எங்க ஊரு காதல் - நவகவி

கற்பனை எல் லாம் பெருசா
தேவையில்லீங்க
         காதல் என்றால் என்னவென்று சொல்ல!
பொடிநடையா எங்க ஊரு 
பக்கம் வாங்களேன்
         காதலைஅ றிந்து கொண்டு செல்ல!
                                                  (கற்பனை)
பூமியை ஓர் தங்க ராட்டினம்
போல காதல் சுத்த வைக்குமாம்!
         எங்க ஊரில் அந்த காதல் இல்லவே இல்லே!
அன்னாடங் காய்ச்சியாகவே
பன்னாடை பஞ்சையாகவே
         காதல் இங்கே குந்தி இருக்கு குப்பத்துக்குள்ளே!
 பட்டுத் துணியில் பளபளக்கல காதல்
ஒட்டுத் துணியில் ஒட்டி இருக்கு காதல்!
         கஞ்சிக்கும் ஊறுகாய்க்கும்
         கலப்பு மணக் காதல்!
                                                  (கற்பனை)
மந்தையிலே நிக்கும் தேருபோல்
மகாப்பழைய எங்கள் காதலில்
         எங்கஊரு எருமுட்டையின் வாசனை வீசும்!
கந்தையிலே முடிந்து வைத்தது ;
கண்ணீருக்கு உப்பு தந்தது ;
         எங்க காதல் சேர்த்துவைக்கல பணமும் காசும்!
கம்மாய் தான் வரண்டிருக்குது ஊரில்
காதல் எப்பவும் சுரந்திருக்குது வாழ்வில்!
         வத்தல் தொத்தல் உடம்புக்குள்ளே
         வத்தாத காதல்!
                                                  (கற்பனை)
கரிசக்காட்டு நிறம்போல் தேகம்!
புஞ்சைக் காட்டுச் சாமையின் சாயல்!
         எங்க ஊரு காதலோட சிறப்பியல்புகள்!
பொரிந்துஉப்புன சோளப் பொரிக்கும்
பூரிப்பான எங்க மனசுக்கும்
         அதிகம் வெள்ளை யாருஎன்று போட்டா போட்டிகள்!
காரு வண்டி ஜோரு சிலர் காதல்.
கட்டை வண்டிக் காதல் எங்க ஊரில்!
         கண்டு போக அன்பர்களே
         வாருங்களேன் நேரில்!
                                                  (கற்பனை)

;