headlines

img

இந்தியா என்ன ஒப்பன் சொத்தா? - ந.காவியன்

(பல்லவி)
பற்றி எரியுது இந்திய நாடு…
பாசிச ஆட்சியை வீழ்த்திடக் கூடு!
பெற்ற தாயகம் எங்களின் வீடு!
பிரித்திட சூழ்ச்சி செய்பவர் ஓடு!

(சரணங்கள்)
இந்தியா என்ன, ஒப்பனின் சொத்தா?
இந்நிலம் எம்நிலம்! உனக்கென்ன பித்தா?
இந்துவும் முஸ்லிமும் பேதம் பார்க்கலே…
இரத்தத்தில் யுத்தத்தில் ஒருதாய் மக்களே !
  - (பற்றி எரியுது…)
ஏழைக்கு உயர்கல்வி எட்டாது செய்தாய்…
எழில்மிகு காஷ்மீரை சிதைத்தே வதைத்தாய்…
பாலைகள் ஆகிடப் பசுமைகள் அழித்தாய்…
“பாரத மாதாக்கி” ‘ஆசிட்’ தெளித்தாய் !
  -(பற்றி எரியுது…)
பள்ளத்தில் கிடக்குது பொருளா தாரம்…
பணம்,பொருள், வரிச்சுமை மக்கட்கு பாரம்…
‘பல்லக்குத் தூக்கிகள்’ ‘பாடி’கள் மோசம்…
பாழாய் ஈழத்து அகதிகள் நாசம்….
  -(பற்றி எரியுது…)
குஜராத் முஸ்லிம்கள் குருதியைக் குடித்தாய்…
குறியாய்ச் சட்டங்கள், நீதியை உடைத்தாய்…
நிஜமாய் நீங்கள் ஹிட்லர், முசோலினி…
நெருப்புப் புரட்சியில் வீழ்வீர் இனி இனி… 

பற்றி எரியுது இந்திய நாடு...
பாசிச ஆட்சியை வீழ்த்திடக் கூடு!
பெற்ற தாயகம் எங்களின் வீடு!
பிரித்திட சூழ்ச்சி செய்வர் ஓடு!

;