headlines

img

இருபத்தோராம் நூற்றாண்டு வங்காளக் கவிதைகள் - அம்ஷூமன் கெர்

“பலவகைத் திறன்மிகு கவிஞர் குழுமம், இதற்கு முன் வங்காளக் கவிதைகளில் இருந்திருக்கவில்லை. அவர்களின் கவிதைகள் புறச்சட்டக அமைப்பற்ற தொடர்கள்,  ஒருவகை யான நகைப்புணர்வு. மேலும் வாழ்க்கையின் கலப்பற்ற உணர்வுகளையுடைய மிகவும் கவர்ச்சி மிக்கவையாக இருக்கின்றன”... சுனில் கங்கோபாத்யா 30 ஆண்டுகளுக்கு முன்பு 1990 காலகட்டத்தைச் சேர்ந்த சில கவிஞர்களை மேற்குறித்தவாறு மதிப்பீடு செய்திருக்கிறார்.  1980க்குப் பிறகு எழுத ஆரம்பித்த கவிஞர்கள் சிலரின் கவிதைகள் சுனில் கங்கோபாத்யாவிற்கு மிகவும் கவர்ச்சி மிக்கதாக இருந்திருக்கின்றன. இன்று அவர்  உயிரோடு இருந்து  இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலக் கவிஞர்கள் பற்றி எழுதி யிருப்பின்  இன்னும் நிறைய சொல்லி இருப்பார். கடந்த இருபது ஆண்டு வங்காளக் கவிதைகள் மிகவும் இளவயது கவிஞர்கள் சிலரால் 1980, 1990 காலக் கவிதைகளைவிட மிகவும் வண்ணமய மாக்கியிருக்கின்றன என்பதை  நிச்சயம் சுட்டிக் காட்டியிருப்பார்.  தன்னளவில் எப்போதுமே முதுமை அடையாத அவர் இளைஞர்களுக்குத் தூண் போன்ற ஒத்துழைப்பு தந்தவர்.  சுனில் கங்கோபாத்யாவின் மேற்கூறிய கூற்றானது குறிப்பிட்ட சமூக அரசியல் பொருளா தாரத்தில் எழுத ஆரம்பித்த கவிஞர்களைப் பற்றியது. 1980-களின்  இறுதி மற்றும் 1990 -களின் தொடக்கமானது உலகம் தழுவிய பல நிகழ்வு களுக்கு சாட்சியாகும்.  சோவியத் யூனியனின் வீழ்ச்சி இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கு வழிகோலி யது

ஒன்று: பனிப்போரின் முடிவு இரண்டு: உலகத்தின் ஒரே சக்தியாக உருவெடுத்த அமெரிக்காவின் தோற்றம்.  உலகத்தின்  ஒரு பகுதியில் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டதும், மற்றொரு பகுதியில் வளைகுடா நாடுகள் மீதான போர் ஆரம்பமானதும்  இந்த காலமே; இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றானதும், பெர்லின் சுவரை வெளிநாட்டினர் சுற்றிப்பார்க்கும் வெறும் சுற்றுலாத் தலம்போல மாற்றியதும் இந்த காலமே; உலக வர்த்தக மையம் 1995 - ல்  தோற்று விக்கப்பட்டதும் அதன் உலகமயமாக்கல் கொள்கை புதுப் பண்பைப் பெற்றதும் இந்தக்  காலமே; இக்காலத்தில் இந்தியச் சமூகம் மேற்குறிப்பிட்ட வெளி நிகழ்வுகளின் தாக்கம் மட்டுமின்றி இந்தியாவிலேயே நிகழ்ந்த சில வளர்ச்சி காரணிகளாலும் மிக விரைவாக மாறிக் கொண்டிருந்தது.

உலகமயமாக்கல் இந்தியாவில் உண்மையி லேயே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. அது,  இன்றும் கூட இந்திய சமூகத்தின் உணவு பழக்கவழக்கத்தில், உடை சார்ந்த பயன்பாட்டில்,  பேச்சு நடையில் நேரடி யான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  இந்தியா 1996- ல் இணைய உலகத்திற்குள் நுழைந்தது. ஒவ்வொரு இந்தியனின் தனிப்பட்ட வாழ்க்கை யும் கூட ஒளி - ஒலி ஊடகக் கண்காணிப்பிற்குள் வந்திருந்த காலம் இது. இத்தகையப் பல்லூடக தனியார்  சேனல்களின் காலத்தால் தூர்தர்ஷனின் பழைய காலம் மாற்றம் அடைந்திருக்கிறது. பாபர் மசூதி இடிப்பும் அதன் தொடர்ச்சியான கலவரங்களும் இந்தியாவின் சமூக - அரசியல் வாழ்க்கையின் மீது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின.  1990 -  களில் வங்காள இளைஞர்களின் கவிதைகளில் சுனில் கங்கோபாத்யாய் கண்ட இந்தப் பண்பு இந்தியா விற்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த மாற்றத்தின் வழியாக நேர்ந்த நேரடி விளை வாகும்.  1990களின்  இளம் வங்காளக் கவிஞர்கள் உண்மையாகவே அந்நிகழ்வுகளுடன் உரையாடல் நிகழ்த்தி இருக்கிறார்கள். சில நேரங்களில் மேற்கூறிய சில நிகழ்வுகளின் மீது தீவிரமாக எதிர்வினையும் ஆற்றி இருக்கிறார்கள். 2017-ல் வெளியாகியிருக்கும் சில கவிதைகளில் கூட அதனைக்  காணமுடியும். 

எடுத்துக்காட்டாக யசோதர ராய் சௌத்ரி தனது “அங்காடி” கவிதையில், 
 

“என்னால் நிலவை வாங்க முடிந்தது கம்பியுடன் கூடிய காகித விளக்கை மட்டும் வாங்குவதற்கு பதிலாக” என்கிறார்.

அருணாப் ஸஹா தன்னுடைய “அடித்தளம்” கவிதையில் பின்வருமாறு எழுதுகிறார்:   

“இனிமேல் யாருமே  நங்கூரத்தைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள் புல்டோசர்கள் மட்டுமே ரயில் நிலைய குப்பங்களை அழிக்கும் கடைகளை ஒழுங்காக வரிசைப்படுத்தும்        பலமான காற்று அடித்தளத்தை நிலை குலைக்கும் தளர்வுற்ற நாடோடி வண்டிகள் கனவுக்குள் ஓடித் தேயும்” 

“இனிமேல் யாருமே  நங்கூரத்தைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள் புல்டோசர்கள் மட்டுமே ரயில் நிலைய குப்பங்களை அழிக்கும் கடைகளை ஒழுங்காக வரிசைப்படுத்தும்        பலமான காற்று அடித்தளத்தை நிலை குலைக்கும் தளர்வுற்ற நாடோடி வண்டிகள் கனவுக்குள் ஓடித் தேயும்” 

“எங்கே  காலை செய்தித்தாள் வழங்கப்படவில்லையோ  எங்கே பரபரப்பான சந்தை நாள்தோறும் திறக்கவில்லையோ எங்கே பால்வண்ண வெண்பனி வில்லொ செடியில் மரப்பிடிமானங்களில் பின்னிரவில் படரவில்லையோ இவை எல்லாவற்றையும் ஒருங்கே கொண்டு  ஒரு எல்லைப் பரப்பு உருவாகும் இடத்தில் ஒரு திடமான சாலை நேராகச் செல்லும் முன்னோக்கிச் சென்று மேலும் மேலும் குறுகும் அங்கே என் கணினி விளையாட்டு ஒவ்வொரு நாளும் என்னைக்                     கொண்டுசெல்லும்” 

கவிதையின் கடைசிவரி ஓர் இன்ப அதிர்ச்சி என வருகிறது. ஏறக்குறைய இது குத்துச் சண்டை யின் கடைசி குத்து போன்றது. இதே உத்தியை 1990-களின் கவிஞர்கள் பலர் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.  உலகமயமாக்கலுக்குப் பிறகு வங்காள இளைஞர்களால் சந்தம் மற்றும் உணர்வுக்காக வங்காளம், இந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளின் கலவையாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் - குறிப்பாகப் பேச்சுத் தொடர்புக்காகப் பயன்படுத்தப்படும் மொழியை, ஸ்ரீ ஜோடா, பினாய்க் பண்டோபாத்யாயா,பினாகி தாகூர் ஆகியோர் கவிதைக்குப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். 

பெண்களின் பிரச்சனையை முன்னி லைப்படுத்தும் கவிஞர்களின் குழுவைக்  குறிப்பிடாமல் 21-ம் நூற்றாண்டு வங்காள மொழிக்கவிதைகள் குறித்த எந்தவொரு  விவாதமும் முடிவடையாது. யஷோதரா ராய் சவுத்ரி , பௌலமை சென்கப்தா, செபன்தி கோஷ், மிட்டல் தத்தா போன்ற கவிஞர்கள் பெண்களின் பிரச்சனை மற்றும் பெண்ணியம் சார்ந்த உணர்வுகளை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றிருக்கிறார்கள் . சில இளம் வங்காளப் பெண் கவிஞர்கள் பெண்கள் மீதான அக்கறையை, பெண்ணிய உணர்வுகளின் அனுபவங்களைப் பதிவிடுவதில் 1990 - காலக் கவிஞர்களைவிட தைரியமாக இருப்பதாகவும் தெரிகிறது.  இந்தச் சூழலில் சம்ராக்னி பந்தோபாத்யாவின் மாதவிடாய் குறித்த  கவிதையின் முதல் சில வரிகள்: 

“எல்லா மாதத்தின் ஐந்து நாட்களும் கோயில் மண்டபத்தில் நுழையத் தடுக்கப்                 படுகிறேன்  கடைசி நாளில் குளித்துப் புனிதமடைகிறேன்   எப்போதும் மார்பகங்கள் மூடப்பட்டும்  சமூகச் சட்டங்களைப் பின்பற்றுதலால்                      சூழப்பட்டும் இருக்கும் நான் ஒரு பெண்  இவ்வாழ்க்கையில் நான் மார்பகங்களை மூடக் கவலை                         கொள்ளவில்லை  எந்த உள்ளாடைகளையும் தொடவில்லை                நீங்கள் இது தூய்மை, புனிதம் என்றால் நான் நல்லவள் தூய்மையில்லை புனிதமற்றது என்றால் நானே உதாரணமாகிறேன்” 

இக்கட்டுரை ஒடுக்கப்பட்ட மஹடோ  சமூகத்தின் பிரதிநிதி போல இருக்கிற அபிமன்யூ மஹடோவைக்  குறிப்பிட்டு முடிக்கப்படு கிறது.கடைசி இருபதாண்டு வளர்ச்சிக்கு சாட்சியாக வங்காளக் கவிதைகள் இருக்கின்றன. கல்வியின் பரவலாக்கம் மற்றும் கல்வியறி வின்  வளர்ச்சியால் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞர்கள் அதிக எண்ணிக்கை யில் கவிதைகளை எழுத ஆரம்பித்திருக்கி றார்கள்.  இதன் மூலம் கவிதை என்பது உயர் சமூகத்திற்கானது என்பது பொருளற்றதாகியி ருக்கிறது. அவர்களின் கவிதைகள் வங்காள கிராமங்களின் வறுமையையும்,  அழகையும் நம்பத்தகுந்த வகையில் சித்தரிக்கின்றன.  21- ம் நூற்றாண்டு வங்காளக் கவிதைகள் உண்மையிலேயே ஒரு வானவில் போல காட்சியளிக்கின்றன.  போல என்பது கவனமாக பயன்படுத்தப்படுகிறது.  ஏனெனில் இது உண்மையான வானவில் போலன்றி ஏழு வண்ணங்களைவிட அதிக வண்ணங்களைக் கொண்டுள்ளன. 

தமிழாக்கம் : 
ஆ. ஈஸ்வரன்

( நல்லி திசைஎட்டும் மொழியாக்கக் காலாண்டு - ஏப்ரல் - ஜூன் ,2019 இதழிலிருந்து)

;