headlines

img

‘தமிழ்த் தொலைக்காட்சிகளில் திருநங்கையர் பதிவுகள்’ - முனைவர் கி. அய்யப்பன்

காட்சி ஊடகத்தின் ஒரு அங்கமாகத் திகழும் தொலைக்காட்சிகளில் திருநங்கை யர் பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படு கின்றன.  திருநங்கை ரோஸ், விஜய் தொலைக்காட்சியில் ‘இப்படிக்கு ரோஸ்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  திருநங்கை பத்மினி பிரகாஷ் லோட்டஸ் தொலைக்காட்சி யில் செய்தி வாசிப்பாளர்.  கேப்டன் தொலைக்காட்சியில் மனம் விட்டுப் பேசலாம், சத்தியம் தொலைக்காட்சியில் திருநங்கை கதைகள், சத்தியம் சாத்தியமே,  தந்தி தொலைக்காட்சியில் அச்சம் தவிர், உள்ளது உள்ளபடி,  திருநங்கைகள் திரு மணம், அர்த்தநாரி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ரௌத்திரம் பழகு, பெண்மையைப்  போற்றுவோம்,  விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா,  தேவனால் எல்லாம் கூடும், நியூஸ்7 தமிழ் சேனலில் ஆண்டவனின் திருமகள்,  பீனிக்ஸ் மனிதர்கள், வேந்தர் தொலைக்காட்சியில் திரு நாளில் திருநங்கையர், பொதிகை தொலைக்காட்சியில் திருத்தங்கைகள்,  கருத்துக்களம்,  ராஜ் தொலைக்காட்சி யில் கோப்பியம், கலைஞர் தொலைக்காட்சியில் திருநங்கைகள் இன்றளவும் ஏங்குவது பெற்றோரின் பாசத்திற்கா? சமுதாயத்தின் அர வணைப்பிற்கா?  காதல் வாழ்விற்கா? எனும் லியோனி தலைமையிலான பட்டிமன்றம்,  சன் தொலைக்காட்சியில் நிஜங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் திருநங்கைகள் தொடர்பாக தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்ப ப்பட்டன.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திருநங்கைகளின் வேதனைகள்,  வலிகள்,  சாதனைகளை கனத்த இதயத்துடன் வெளிப்படுத்துவதாக இருந்தன.  பெரும்பாலும் திருநங்கை களுடன் நேர்காணல்,  உளவியலாளர்,  மருத்துவர், சமூகவியலாளர் முதலி யோரின் கருத்துக்கள் இந்நிகழ்வுகளில் இடம்பெற்றன இடம்பெற்றன.  தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அச்சம் தவிர் என்ற நிகழ்ச்சியில் திருநங்கையர் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி  சுமார் 20 நிமிடங்கள் ஒளிபரப்பானது. திருநங்கைகளும் பெற்றோர் நிலையும் என்னும் பொருண்மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தொகுத்து வழங்கினார். திருநங்கைகள் ஷானா,  கிரேஸ் பானு , டாக்டர் ராஜாராம் (பிளாஸ்டிக் சர்ஜன்), பேராசிரியர் உலகநாயகி பழனி யப்பன்,  டாக்டர் லட்சுமி பாய் (சமூக ஆர்வலர்) ஆகியோர் கலந்துகொண்டு விவாதித்தனர்.  மதுரை பொதிகை தொலைக்காட்சி நிலையம் திருத்தங்கைகள் எனும் நிகழ்ச்சியை ஓராண்டுகாலம் (12-3-2016 முதல் 27-5-2017வரை) வழங்கியது. இந்நிகழ்வினை ஆண்டாள் பிரியதர்ஷினி,  சுமதி ராஜகோபால் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர்.  நிகழ்ச்சியின் தொடக்கப் பாடலாக ஒலிக்கும்  “எங்களின் குரலைக் கேளுங்கள் ... திருநங்கைகள் குரலைக் கேளுங்கள்”  என்னும் பாடல் ஆண்டாள் பிரியதர்ஷினி  எழுதியது.  இந்நிகழ்ச்சிகளில் திருநங்கைகள் பத்மினி பிரகாஷ் ( முதல் செய்தி வாசிப்பாளர்,  நடனக்கலைஞர்) தேனி யைச் சேர்ந்த சுவாதி (கிராமியக் கலைஞர் ) மீ. முத்துமீனாட்சி (பரதக் கலைஞர்) கிருஷ்ணகிரி சிவரஞ்சனி (சமூக ஆர்வலர்) பு. ஊர்வசி (வேளாண்மையாளர் ) பிரியாபாபு (எழுத்தாளர், சமூக சேவகர், ஊடகவியலாளர்) குணவதி (பச்சிளம் குழந்தை - சிசு பாதுகாப்பாளர்) பா.நிலா ( நடனக்கலைஞர் )நா. பிரியா ( ஜான்சிராணி கலைக்குழு - நடனக்கலை ஞர்) அனுசுயா ஸ்ரீ (வேதங்கள் தெரிந்தவர்) பாரதிகண்ணம்மா (சமூக ஆர்வலர்) ரோகிணி (ஆட்டோ ஓட்டுனர் , சமூக ஆர்வலர் ) சுதா (சமூக ஆர்வலர் ) சக்திதேவி (இறை நம்பிக்கையாளர்) ஆ.பிருந்தா ( சமூக ஆர்வலர்) எஸ்தர் பாரதி (போதகர்) வைஷ்ணவி (வாகன ஓட்டுநர்) பா.மீனா (ஒப்பனைக் கலைஞர்) கோ.அஜீதா ( நாட்டுப்புற கலைஞர்) இரா.சுபா, அ.இளவஞ்சி (நாட்டுப்புற கலைஞர்கள் ) யு. கோபிகா, ஆ. சுகன்யா (சமூக ஆர்வலர்கள் ) பா.  ரங்கீலா ஜீவன் (சமூக ஆர்வலர்) சுஜாதா (சமூக ஆர்வலர்) சுசீலா (சமூக ஆர்வலர் , எழுத்தாளர் ) ஆர். திலொத்தமா (சமூக ஆர்வலர் ) ஹர்ஷினி ( சமூக ஆர்வலர் ) சுபிக்ஷா ( சமூக ஆர்வலர் ) அபிநயா( சமூக ஆர்வலர் )வந்தனா (கணியன் கூத்து ஆடுபவர்) ஆகியோர் பங்கேற்று  வேதனைகளையும் சாதனைகளையும் பதிவு செய்தனர்.  கூவாகம்  திருவிழாவில் திருநங்கை பத்ம சுலொசனாவின்  நேர்காணல் பதிவும் சிறப்பாக இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இவ்வாறு திருநங்கைகள் தொடர்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகளும் ஒளிபரப்பி வருவதன் வாயிலாகக் கடந்த சில ஆண்டுகளில் சமூகத்தில் திருநங்கை கள் மீதான பார்வை மாறி வருகிறது. எனவே திருநங்கையர் மேம்பாட்டிற்குத் தொலைக்காட்சி ஊடகத்தின் பங்கு மகத்தானது எனலாம்.  மக்களிடம் திருநங்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தி வருவதில் தொலைக்காட்சி ஊடகத்திற்கு பெரிய பங்கு உள்ளது என்றால் மிகையாகாது.  

 ( மலேசியாவில் நவம்பர் 9 , 10 தேதிகளில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ்க்கவிதை மாநாட்டு மலரில் வெளியான கட்டுரையின் சுருக்கம் )

;